கரூரில் போட்டி ஊர்வலம் நடத்தி காங்., கட்சி நிர்வாகிகள் கூத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரூரில் போட்டி ஊர்வலம் நடத்தி காங்., கட்சி நிர்வாகிகள் கூத்து

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கரூர்: கரூரில், போட்டி ஊர்வலம் நடத்தி காங்., கட்சி நிர்வாகிகள் கூத்தடித்தனர். தமிழக காங்., கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட பின், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாவட்டத் தலைவர்களாக இருந்தவர்களை நீக்கி விட்டு, புதிய தலைவர்களை நியமித்தார். அதன்படி, கரூர் மாவட்டத் தலைவராக இருந்த சுப்பிரமணியம் நீக்கப்பட்டு, தென்னிலையை சேர்ந்த, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சின்னசாமி நியமிக்கப்பட்டார். இதனால், கரூரில், காங்., கட்சி நிர்வாகிகள், சின்னசாமி தலைமையில் ஒரு கோஷ்டியாகவும், சுப்பிரமணியம் தலைமையில் ஒரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ரபேல் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக கூறி, காங்., கட்சியினர் நேற்று கண்டன ஊர்வலம் நடத்தினர். கரூரில், கோவை சாலையில் இருந்து, தலைமை தபால் நிலையம் வரை, ஊர்வலம் நடத்த, மாவட்ட நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை, 11:00 மணிக்கு, கோவை சாலையில் ஊர்வலம் புறப்பட்டது. முதலாவதாக, மாவட்டத் தலைவர் சின்னசாமி தலைமையில், மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, திருச்சி வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் சென்றனர். அடுத்ததாக, 15 அடி தூரத்தில், சுப்பிரமணியம் தலைமையில், ஒரு பிரிவினர் தனியாக ஊர்வலம் சென்றனர். தலைமை தபால் நிலையம் வரை செல்ல திட்டமிட்ட காங்., கட்சியினர், தாலுகா அலுவலகம் அருகே நின்று விட்டனர். பிறகு, ரபேல் ஜெட் போர் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக கூறி, அங்கேயே ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, இரண்டு கோஷ்டியினரும் சேர்ந்து, மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். முன்னதாக, தனித் தனியாக ஊர்வலம் நடத்திய காங்., கட்சியினரைப் பார்த்து, தொண்டர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X