தி.மு.க.,வுடன் வைகோ கூட்டணி : திருமா உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுடன் வைகோ கூட்டணி : திருமா உறுதி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஈரோடு: ''தி.மு.க.,வுடன் நிபந்தனை இல்லாத, கூட்டணி வைப்பதாக, வைகோ கூறியிருப்பது, இன்றைய சமூக நிலையை காப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவாகும். வைகோ முடிவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொடர்ந்து கைகோர்த்து நிற்கும்,'' என்று, ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க., மாநாட்டில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் பேசினார்.
ம.தி.மு.க., மாநாட்டின், மாலை நிகழ்ச்சியை, துணை பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். தொடர்ந்து, பல்வேறு தலைவர்கள் பேசினர்.

* தேசியவாத காங்., கட்சி எம்.பி., மஜித்மேமன்: தேசியவாத காங்., முழு வலிமையுடன், திராவிட கட்சிகள் பக்கம் உள்ளது. ஒடுக்கு முறைக்கு எதிரான, அநீதிக்கு எதிரான உங்கள் போராட்டத்தில், நீங்கள் வெற்றி பெற வேண்டும்.

* விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன்: வைகோவின் தியாகம், கொள்கை செயல்பாடு, செய்த பணிகள், போராட்ட விளைவுகளை நாம் அங்கீகரிக்கவில்லை என்றால், நாம் நன்றி கெட்டவர்களாகி விடுவோம். 18 ஆண்டு காலம் அவர் பாராளுமன்றத்தில் பேசியவை, அவை குறிப்பில் உள்ளது. அவர் பேசாத பொருள் இல்லை. தமிழகத்துக்காக, தென்னிந்திய மாநிலங்களின் உரிமைக்காக அவர் குரல் கொடுத்தவை, சாட்சிகளாக உள்ளன. அண்ணாதுரைக்குப்பின், உண்மை பேசிக்கூடிய தலைவர் வைகோ என்பதால், அவரிடம் அதிக உணர்ச்சி உள்ளது. தமிழகத்தில் இன்று ஜாதிய, மதவாதங்கள் தலை தூக்குகிறது. அவற்றை ஒட்ட நறுக்க திராவிட இயக்கம், வைகோ தேவைப்படுகின்றனர். திராவிட இயக்கம் என்பது, தமிழ் தேசியத்துக்கு எதிரானதல்ல. மதச்சார்பின்மையை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஓட்டுக்காக அரசியலில் வைகோ சமரசம் செய்து கொள்ளாததால்தான், தோல்வியை சந்திக்கிறார். ஆனால், சமூகத்தால் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளார். தமிழகத்தில் சில தொகுதிகளை பெறுவதற்காக, மக்கள் நலக்கூட்டணியில் இருந்த நாங்கள், தி.மு.க.,வுடன் கைகோர்க்கவில்லை. 'தி.மு.க.,வுடன் எந்த நிபந்தனையும் இல்லாத கூட்டணியை, ம.தி.மு.க., வைக்கும்' என, வைகோ கூறி இருப்பது, இன்றைய சமூக நிலையை காப்பதற்காக எடுக்கப்பட்ட முடிவாகும். வைகோவின் இந்த முடிவுக்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தொடர்ந்து கைகோர்த்து நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X