காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க விரும்புகிறது; பிரிக்க முயல வேண்டாமென பரூக் பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க விரும்புகிறது; பிரிக்க முயல வேண்டாமென பரூக் பேச்சு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஈரோடு: ''காஷ்மீர், இந்தியாவுடன் இருக்க விரும்புகிறது. யாரும் பிரிக்க வேண்டாம்,'' என, அம்மாநில முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பேசினார்.
ஈரோட்டில் நடந்த ம.தி.மு.க., மாநாட்டில், அவர் பேசியதாவது: நம் நாடு நெருக்கடியில் செல்கிறது. இந்தியா எந்த கொள்கையின் அடிப்படையில் தட்டி எழுப்பப்பட்டதோ, அதுவே பெருமை. நமது அரசியல் அமைப்பு சமயச்சார்பற்றது. நமக்கிடையே பாகுபாடு காட்டுவதில்லை. அந்த அரசமைப்புக்கு ஆபத்து வந்துள்ளது. இதை பாதுகாக்க தவறினால், மற்றொரு வாய்ப்பு கிடைக்காது. பாகிஸ்தான் இங்கிருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின், வங்கதேசம் பிரிந்தது. நாம் எல்லைகளாக மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளோம். ஒன்றுபட்டு செயல்பட்டால், எல்லைகள் தேவையற்றதாகும். நமது அமைதிக்கும், ஒற்றுமைக்கும் தடையாக, பாகிஸ்தான் ராணுவம் உள்ளது. வங்க தேசத்தை நாம் பிரித்தோம் என நினைக்கின்றனர். ஆனால், பாகிஸ்தான் ராணுவம் தான் பிரித்தது என்பதை அனைவரும் அறிவர். பாகிஸ்தானுக்கு, எந்த ஒரு இந்தியனும் எதிரானவன் அல்ல. அதேநேரம், பயங்கரவாதத்தை யாரும் ஏற்க மாட்டார்கள். இந்த மேடையில் இருந்து, பாகிஸ்தானுக்கு கூறுவது, உங்களுடன் அமைதியாக வாழ விரும்புகிறோம். நாங்கள் இந்தியாவில் இருந்து பிரிக்க முடியாதவர்கள். பிரிக்க முடியாத பகுதியாகவே இருக்க விரும்புகிறோம் என்பதை அறியுங்கள். நடந்தது முடிந்ததாகட்டும்; அமைதியாக நிரந்தரமாக வாழ்வோம். நமக்கு அமைதியே வேண்டும்; போர் கூடாது. காஷ்மீரை கடவுள் அழகு நிலமாக படைத்துவிட்டார். உலகில் எங்கும் அதுபோல இல்லை. தற்போது வந்து பாருங்கள். இதுபோன்ற நிலை காஷ்மீருக்கு வரக்கூடாது, என வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் நலனுக்காக இந்தியாவை பிரித்து விடாதீர்கள் என, பா.ஜ.,வை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X