'இனம் பார்த்து பழகு; களம் பார்த்து கால் வை': வைகோவுக்கு, துரைமுருகன் அட்வைஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'இனம் பார்த்து பழகு; களம் பார்த்து கால் வை': வைகோவுக்கு, துரைமுருகன் அட்வைஸ்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

ஈரோடு: ''போராட்ட குணம் கொண்ட வைகோ, இனம் பார்த்து பழகு; களம் பார்த்து கால் வை,'' என, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் பேசினார்.
ஈரோட்டில் நடந்த, ம.தி.மு.க., மாநாட்டில், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்து பேசியதாவது: எனக்கும், வைகோவுக்கும், தலைவர் கருணாநிதி. அவரால் வளர்க்கப்பட்ட, விலாசம் வழங்கப்பட்ட நாங்கள், எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், கருணாநிதி எங்கள் சக்தி என நினைப்பதால் தான், நாங்கள் அரசியலில் இருக்க முடிகிறது. அரசியலில் மாறுபட்டு இருந்த காலத்தில், நான் அவரை வெளுத்து வாங்கி இருக்கிறேன். ஆனால், வைகோ ஒரு நாளும் என்னை ஒரு சொல் சொன்னது இல்லை. அவர் முதன் முதலாக கட்சியை துவக்கிய போது, என் தொகுதியில் தான் கொடியேற்றினார். ராஜிவ்காந்தியை, 'ஓடாதே. நில்' என பிரதமர் என்று கூட பார்க்காமல் அழைத்த ஒரே தமிழன் வைகோ தான். அவர் ஜெயிலில் தான் அதிகம் வாழ்ந்தார். பல நாட்களாக அவர் நடப்பார் அல்லது ஜெயிலுக்கு செல்வார். அவரது போராட்டமும், முயற்சிகளும் வீண் போகாது. இன்னும், பல நூறு ஆண்டு வைகோ போராட வேண்டும். ஆனால், இனம் பார்த்து பழகு; களம் பார்த்து கால் வை. ஒருமுறை திண்டுக்கல் மாநாட்டில் கருணாநிதி பேசும்போது, 'நான் வைகோவை இழந்தேனா; அவர் என்னை இழந்தாரா' என கேட்டபோது, அவரும், வைகோவும் கண்ணீர் விட்டனர். பிளவுகள் வரலாம்; ஆனால், கொள்கையில் முரண்பாடு வரக்கூடாது. நேர் எதிராக போகக்கூடாது. வைகோவுக்கு, தி.மு.க.,வில் ஒரு ஊடல், சினங்கள் ஏற்பட்டது. அவர் கொள்கை மாறவில்லை. அதனால் தான் ஒரே இடத்தில் இன்று இருக்கிறோம். அரசியலில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தியாகம் செய்தவர் வைகோ.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X