'சிசி டிவி' கேமராவால் குற்றம் குறைந்துள்ளது: நீதிபதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'சிசி டிவி' கேமராவால் குற்றம் குறைந்துள்ளது: நீதிபதி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கரூர்: "நாட்டில், 'சிசி டிவி' கேமராவால், குற்றங்கள் குறைந்துள்ளன,” என, விழிப்புணர்வு முகாமில், நீதிபதி தங்கவேல் பேசினார்.
கரூர் அரசு கலைக் கல்லூரியில், கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், சைபர் குற்றம் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. அதில், சார்பு நீதிபதி தங்கவேல் தலைமை வகித்து பேசியதாவது: நம் அன்றாட வாழ்க்கையில் மொபைல் ஒரு பாதுகாப்புக் கருவியாக உள்ளது. அவசர காலங்களில் நமக்கு வேண்டியவரிடம் ஜி.பி.எஸ்., மூலம் தொடர்பு கொண்டு பாதுகாப்பைப் பெறும்போது அது நன்மை தரக்கூடியதாக இருக்கிறது. அதேவேளையில், மொபைலில் உள்ள தவறான கருத்துகளை உள்வாங்குவதன் மூலம், அது தீமை தரக் கூடியதாக மாறிவிடுகிறது. நாட்டில் சைபர் கிரைம் அதிகளவில் பரவி வருகிறது. மொபைல் மூலமே பல அரிய தகவல்கள் திருடப்படுகின்றன. 'சிசி டிவி' கேமரா இருப்பதால், திருட்டுச் சம்பவங்கள் குறைந்துள்ளன. உங்களை, 'சிசி டிவி' கேமரா மூலம் யாரோ கண்காணிக்கிறார்கள் என மனதில் நினைத்துக் கொண்டால், எந்தக் குற்றமும் செய்ய மாட்டீர்கள். சட்டம் இயற்றுவது லோக்சபாவாக இருந்தாலும், சாதாரண அதிகாரிகள் முதல், தலைமைச் செயலர்கள் வரை உள்ளவர்கள்தான் அதை செயல்படுத்துகின்றனர். அரசியல் கட்சியினர் வருவார்கள், போவார்கள், ஆட்சி மாறும், காட்சி மாறும். ஆனால், சட்டம் ஒன்று மட்டுமே நிலையானது. இவ்வாறு அவர் பேசினார். முகாமில், கல்லூரி முதல்வர் ஜோதிவெங்கடேஷ்வரன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் சொக்கலிங்கம், குளோபல் சமூக நலப் பாதுகாப்பு இயக்க நிர்வாகி வேலாயுதம் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X