நீரில் ஓட்டி செல்லும் சைக்கிள் தயாரிப்பு: அணை கரையோர மாணவர்கள் புதுமுயற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நீரில் ஓட்டி செல்லும் சைக்கிள் தயாரிப்பு: அணை கரையோர மாணவர்கள் புதுமுயற்சி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை கரையோரத்தில் வசிக்கும், மாணவர்கள் இருவர் நீரில் ஓட்டி செல்லும் சைக்கிளை தயாரித்து பயன்படுத்துகின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூர் அணை கரையோரத்திலுள்ள, காவேரிபுரம் கிராமத்தை சேர்ந்த பழனிசாமி மகன் தமிழ்குமரன், 18. அதே பகுதியை சேர்ந்த கோபால் மகன் குணசேகரன், 18; இருவரும் நண்பர்கள். தமிழ்குமரன் தனியார் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டும், குணசேகரன், எலக்ரானிக்கல் கம்யூனிகேசன்ஸ் முதலாமாண்டும் படிக்கின்றனர். இருவரும் கடந்த வாரம் நீரில் ஓட்டி செல்லும் சைக்கிளை தயாரித்து, நண்பர்களுடன் மேட்டூர் அணை நீர்பரப்பில் ஓட்டி விளையாடுகின்றனர்.

தமிழ்குமரன் கூறியதாவது: அணை கரையோரத்தில் வசிக்கும் நாங்கள் பரிசலில் மட்டுமே தண்ணீரை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதற்கு பதிலாக வேறு வாகனத்தை பயன்படுத்தி நீரில் செல்வது குறித்து யோசித்தோம். அதை தொடர்ந்து நீரில் ஓட்டி செல்லும் சைக்கிளை உருவாக்கினோம். என் தந்தை லாரி பாடி கட்டும் பட்டறை வைத்துள்ளார். குணசேகரன் தந்தை டூவீலர் பழுதுபார்க்கும் பணிமனை வைத்துள்ளார். இதனால், சைக்கிளை உருவாக்குவதில் எங்களுக்கு சிரமம் ஏற்படவில்லை. நான்கு பிளாஸ்டிக் குழாய்களை இணைத்து, அதன் உட்பகுதியில் டியூப்பை திணித்து, காற்றடைத்து வைத்தோம். பின் தண்ணீரை கிழித்து செல்லும் வகையில் பிளேடுகள், சைக்கிள் செயின் ஆகியவற்றை இணைத்து, நீரில் செல்லும் சைக்கிளை உருவாக்கினோம். இதற்கு, 2,000 ரூபாய் செலவானது. இந்த சைக்கிளை நீரில் ஒருவர் எளிதாக ஓட்டி செல்ல முடியும். வரும் நாட்களில் இருவர் ஓட்டி செல்லும் வகையில் சைக்கிளை உருவாக்கி மோட்டார் மூலம் இயக்கி நீரில் ஓட்டி செல்ல திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X