'ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து செப்.,28ல் கடை அடைப்பு போராட்டம்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து செப்.,28ல் கடை அடைப்பு போராட்டம்'

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேலம்: ''ஆன்லைன் மருந்து விற்பனையை கண்டித்து, செப்.,21 முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து விற்பனையில் ஈடுபட உள்ளோம். செப்.,28ல் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும்,'' என, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் செல்வம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது: உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகளை ஆன்லைன் மூலம் விற்பனை செய்வதை தடை செய்ய, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், எங்களின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை. அதனால் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆன்லைன் மருந்து வணிகத்தால், வியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். மருத்துவ விதிகளின் படி, மருத்துவரின் பரிந்துரை சீட்டுக்கள் இல்லாமல், மருந்து மாத்திரைகளை விற்பனை செய்ய தடை உள்ள நிலையில், ஆன்லைன் மூலம் பல நிறுவனங்கள், மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருகின்றனர். இந்த நடைமுறையால், தடை செய்யப்பட்ட பல மருந்துகள் விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி, பொதுமக்களுக்கும், நாட்டுக்கும் ஆபத்தை ஏற்படுத்தும், தீவிரவாதிகளுக்கு கூட மருந்து மாத்திரைகள் எந்த தடையும் இன்றி கிடைக்க வாய்ப்புள்ளது. ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அகில இந்திய மருந்து வணிகர் சங்கம் நடத்தும் முழு கடை அடைப்பு போராட்டத்துக்கு, தமிழக மருந்து வணிகர்கள் சங்கம் முழு ஆதரவை அளிக்கிறது. மத்திய அரசை கண்டிக்கும் வகையில், அகில இந்திய அளவில், எட்டு லட்சம் மருந்து கடைகளும், தமிழகத்தில், 35 ஆயிரம் மருந்து கடை உரிமையாளர்கள், விற்பனையில் ஈடுபடும் ஊழியர்கள், செப்.,21 முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து விற்பனையில் ஈடுபடுவர். வரும் செப்.,28 காலை, 6:00 மணி முதல், மறுநாள் காலை, 6:00 மணி வரை, மருந்து கடைகள் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X