சரஸ்வதி, ஆயுத பூஜை விற்பனைக்காக அடுப்பு மூலம் தயாரிக்கும் பொரி உற்பத்தி சுறுசுறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சரஸ்வதி, ஆயுத பூஜை விற்பனைக்காக அடுப்பு மூலம் தயாரிக்கும் பொரி உற்பத்தி சுறுசுறுப்பு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சேலம்: சரஸ்வதி பூஜைக்கு இன்னும், குறைந்த நாட்களே உள்ள நிலையில், ருசிக்காக மெஷின் பொரியை தவிர்த்து, அடுப்பு மூலம் தயாரிக்கும் பொரிக்கு, வியாபாரிகள் ஆர்டர் கொடுத்து வருவதால், சேலத்தில் உற்பத்தி சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.
அக்., 10ல் நவராத்திரி துவங்குகிறது. அக்.,18ல் சரஸ்வதி பூஜை, அக்.,19ல் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைகளுக்கு இன்னும், 25 நாட்களே உள்ள நிலையில், சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் செயல்படும், பொரி உற்பத்தி நிலையங்களில், அடுப்பு பொரிக்கான ஆர்டர் குவியத் துவங்கி உள்ளது. இதில், தர்மபுரி, காரிமங்கலம், கிருஷ்ணகிரியில் அதிக அளவில் மெஷின் மூலமே பொரி தயாரிக்கப்படுகிறது. சேலம், செவ்வாய்ப்பேட்டை, அம்மாபேட்டை, ஓமலூர் ஆகிய இடங்களில், அடுப்பு மூலம், பழைய முறையில் பொரி தயாரிக்கப்படுகிறது. சேலம் பொரிக்கு வியாபாரிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பொரி தயாரிப்புக்காக, கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து, 64 இன்டால் நெல்லை வரவழைத்து, அதை மிதமான முறையில், வேக வைத்து, உப்பு தண்ணீர் தெளித்து, பக்குவப்படுத்தி, ஏழு நாட்களுக்கு பின்னரே பொரியை தயாரிக்கின்றனர். பொதுமக்கள் மத்தியில் மெஷின் பொரிக்கு வரவேற்பு குறைந்து, அடுப்பு மூலம் தயாரிக்கப்படும் பொரியை விரும்பி கேட்பதால், வியாபாரிகள் அடுப்பு பொரிக்கு அதிக அளவில் ஆர்டர் கொடுத்து வருகின்றனர். இதில், கடந்த ஆண்டு, பொரி தயாரிப்புக்கு பயன் படுத்தப்பட்ட நெல், 75 கிலோ மூட்டை, 1,500 ரூபாய்க்கு விற்ற நிலையில், நடப்பாண்டில், 200 ரூபாய் அதிகரித்து, 1,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால், பொரி விலை, மூட்டைக்கு, 20 ரூபாய் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு, எட்டு கிலோ எடை கொண்ட மூட்டை, 400 ரூபாய்க்கு விற்பனையானது. தற்போது, 420 ரூபாயாக விலை உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X