கோவிலில் உலோக சிலையை வைத்து சென்றவர் முதியவர்: கேமரா மூலம் கண்டுபிடிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோவிலில் உலோக சிலையை வைத்து சென்றவர் முதியவர்: கேமரா மூலம் கண்டுபிடிப்பு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: கோவிலில், அர்த்தநாரீஸ்வரர் சிலையை வைத்தது, முதியவர் என, கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேலம், இரண்டாவது அக்ரஹாரம், காசிவிஸ்வநாதர் கோவிலில், கடந்த, 13ல், மர்ம நபர், அர்த்தநாரீஸ்வரர் சிலையை வைத்துவிட்டு சென்றார். அது திருடப்பட்டதா என, டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, கோவில் வளாகம், சாலையிலுள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு முதியவர், மஞ்சள் பையில் சிலையை எடுத்து வந்து, கோவிலுக்குள் வைத்துச்செல்வது தெரியவந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என, போலீசார் விசாரிக்கின்றனர். முதியவர், சிலை கடத்தல் வழக்குகளில் சம்பந்தப்பட்டவரா என்பதை அறிய, அப்பிரிவின் ஐ.ஜி., பொன்மாணிக்கவேலுக்கு, அவரது படத்தை, போலீசார் அனுப்பி விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X