8 பவுன் செயினுடன் விநாயகர் சிலைகள் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

8 பவுன் செயினுடன் விநாயகர் சிலைகள் திருட்டு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பேர்ணாம்பட்டு: எட்டு பவுன் செயினுடன், பிரதிஷ்டை செய்யப்பட்ட, நான்கு விநாயகர் சிலைகள் திருட்டு போனது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டில், இந்து முன்னணி சார்பில், 20 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று, விநாயகர் சிலைகளைக் கரைக்க ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அப்போது, பாண்டியன் வீதி ஓம்சக்தி விநாயகர் கோவில், பக்காலப்பள்ளி மெயின் ரோடு, சாலப்பேட்டை பஜார் தெரு, வி.கோட்டா ரோடு ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த, மூன்று அடி உயரமுள்ள, நான்கு விநாயகர் சிலைகள் காணவில்லை. ஒவ்வொரு சிலைகளிலும், தலா, இரண்டு பவுன் செயின் அணிவிக்கப்பட்டிருந்தது. செயினுடன், சிலைகளை திருடிச் சென்றவர்களை, பேர்ணாம்பட்டு போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X