முன்விரோதத்தால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோதத்தால் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கல்வீச்சு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவண்ணாமலை: விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில், முன்விரோதத்தால் கல்வீச்சில் ஈடுபட்ட, இருவரை மடக்கி பிடித்து, போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். கடந்த, 13ல், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாவட்டத்தில், 1,600 இடங்களில், விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதில், திருவண்ணாமலையில், 140க்கும் மேற்பட்ட சிலைகள் வைத்து, மக்கள் வழிபாடு நடத்தினர். நேற்று, அனைத்து சிலைகளும், காந்தி சிலை முன் கொண்டு வரப்பட்டது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் சங்கர், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முருகையன் தலைமையில், தேரடி வீதி, திருவூடல் வீதி, திருமஞ்சன கோபுவீதி, தண்டராம்பட்டு சாலை வழியாக சிலைகள் கரைக்கும், தாமரை குளத்துக்கு ஊர்வலம் சென்றது. அப்போது, தண்டராம்பட்டு சாலையில் செல்லும்போது, முன்விரோதம் காரணமாக, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு, ஊர்வலத்தில் கல்வீச்சு நடந்தது. கல்வீச்சில் ஈடுபட்ட, எட்டு பேரை விரட்டிப் பிடித்த டவுன் போலீசார், விசாரணைக்கு அழைத்து சென்றனர். கடந்தாண்டு நடந்த மோதலின் எதிரொலியாக, இரு தரப்பினரிடையே தற்போது கல்வீச்சு நடந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து, விநாயகர் சிலைகள் தாமரை குளத்தில் கரைக்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X