Decision To Change Vijay Mallya Notice Taken At "Appropriate Level": CBI | மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் மாற்றம் ஏன்?: சிபிஐ விளக்கம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் மாற்றம் ஏன்?: சிபிஐ விளக்கம்

Updated : செப் 16, 2018 | Added : செப் 16, 2018 | கருத்துகள் (37)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
விஜய் மல்லையா, சிபிஐ, ராகுல், ராகுல் காந்தி, ஏகே சர்மா, பிரதமர் மோடி, காங்கிரஸ், vijay mallya,  cbi, rahul, rahul gandhi,  ak sharma, PMModi, congress

புதுடில்லி: தொழிலதிபர் மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் மாற்றப்பட்ட முடிவு, ஆலோசனைக்கு பின் முறையான அளவிலேயே எடுக்கப்பட்டதாக சிபிஐ விளக்கமளித்துள்ளது.


சர்ச்சை

ரூ.9 ஆயிரம் கோடி வங்கி கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தங்கியுள்ளார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 10ம் தேதி வழங்கப்பட உள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த போது, மல்லையா, தான் லண்டன் செல்வதற்கு முன் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து பேசியதாக கூறினார்.
ஆனால், இதனை அருண் ஜெட்லி மறுத்துள்ளார். பார்லிமென்ட் வளாகத்தில் ஒரிரு நிமிடங்கள் தான் இந்த சந்திப்பு நடந்தது. கடன் சர்ச்சை தொடர்பாக வங்கி நிர்வாகத்திடம் பேசி கொள்ளுமாறு மல்லையாவிடம் கூறிவிட்டதாக விளக்கமளித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.


புகார்

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் டுவிட்டரில் வெளியிட்ட அறிக்கை: சிபிஐ கூடுதல் இயக்குநர் ஏகே சர்மா தான், மல்லையாவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை பலவீனப்படுத்தி, அவரை தப்பி செல்ல அனுமதித்தார். சர்மா, குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதிகாரி. சிபிஐயில், பிரதமருக்கு மிகவும் பிடித்தவர். இவர் தான், நிரவ்மோடி மற்றும் மெகுல் சோக்சி தப்பி செல்வதற்கும் காரணம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



ஆலோசனை

இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ செய்தி தொடர்பாளர் அபிஷேக் தயால் கூறியதாவது: லுக் அவுட் நோட்டீசை மாற்றும் முடிவு தன்னிச்சையாக எடுக்கப்படவில்லை. முறையான அளவிலேயே ஆலோசனைக்கு பிறகு தான் எடுக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் எடுக்கப்படவில்லை. ஏகே சர்மா மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. மல்லையாவை கைது செய்யவோ, தடுத்து நிறுத்தவோ, அடிப்படை முகாந்திரம் இல்லாத காரணத்தினால் தான் நோட்டீஸ் மாற்றப்பட்டது என்பதை பல முறை கூறியுள்ளோம். நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் தப்பி சென்று ஒரு மாதத்திற்கு பின்பே, அவர்களுக்கு எதிரான புகாரை, பஞ்சாப் நேஷனல் வங்கி எங்களுக்கு அளித்தது. இதனால், அவர்கள் தப்பி செல்வதில் எந்த அதிகாரிக்கும் பங்கு உள்ளது என்ற கேள்வியே எழவில்லை. வங்கிகள் புகார் அளித்த உடனேயே நாங்கள் நடவடிக்கையை எடுக்க துவங்கிவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
17-செப்-201806:28:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மல்லையாவுக்கு ஏர்போர்ட்டில் இருந்த ரெட் அலெர்ட்டை தளர்த்தியது யாருன்னு அவன் தப்பிச்சு போன நாள்லே இருந்து கேட்டுக்கிட்டு இருந்தேன்.. ஜெட்லீயோட வேலை தானா அது..
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
17-செப்-201805:40:06 IST Report Abuse
spr இந்த மல்லையா இருமுறை ராஜ்ய சபை உறுப்பினராக இருந்திருக்கிறார். ஒரு நிறுவனத்தை நடத்தி வந்திருக்கிறார் அவர் வங்கியில் கடன் வாங்கி நடத்தும் காலத்திலேயே ஊதாரித்தனமாக செலவழித்திருக்கிறார் வருடா வருடம் நாட்டில் உள்ள அழகான பல பெண்களை, உலகத்தின் பல கடற்கரைகளுக்கும் தனது சொந்த செலவில் அழைத்துச் சென்று பெரிய ஹோட்டல்களில் தங்க வைத்து அவர்களை அரை நிர்வாணமாக படம் எடுத்து காலண்டர் வெளியிடுவார் அதற்கு பல கோடிகள் செலவழியும் பல பிரபல பெண் விளம்பர மாடல்கள் இதற்கு வாய்ப்பு கிடைக்க எதுவும் செய்யத் தயாராக இருந்தார்கள் திப்பு சுல்தான் வாளை ஏறக்குறைய 2 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தார் இது போல பல இடங்களில் ஆளிகைகள் கட்டி இவரும் இவர் மகனும் ஒரு சுல்தான் போல உல்லாசக் கேளிக்கைகளில் ஈடுபட்டதை செய்தியாக போடாத செய்தித்தாள்கள் செய்தித்தாள்களே இல்லை என்று சொல்லுகிற நிலை ஊரில் உள்ள பல பெரிய பணக்காரர்கள், சினிமா நக்ஷ்த்ரங்கள், அரசு அதிகாரிகள் இவர் அழைப்புக்காக ஏங்கிக் கிடந்த காலம் அப்பொழுதெல்லாம் இவரது இந்த ஊதாரித்தனம் யாருக்கும் தெரியாதா வங்கிகள் தாங்கள் கொடுக்கும் கடன் இவரது வெட்டிச் செலவுக்காக என்பதனை புரிந்து கொள்ள முடியாதவர்களா ஆனால் காங்கிரஸ் பெருந்தலைகள் கூட ஜொள்ளுவிட்டுக் கொண்டு இவரது விருந்துகளில் கலந்து கொண்டனர் அவரும் கடன் கேட்டார் வங்கி அதிகாரிகளுக்கு அவரை முறைத்துக் கொள்ள துணிவு இல்லை கொடுத்த கடனைக் கேட்கத் துணிவில்லை சி பி ஐ ஏற்கனவே செயலற்ற ஒரு அமைப்பு வங்கிகளும் புகார் அளிக்காத வகையில் எங்களால் அவரைக் கைது செய்ய முடியாது என்று சொல்வதில் வியப்பில்லை எந்த புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ யாருக்குத் தெரியும் என்று சும்மா இருந்திருக்கலாம் இதேபோலவே அம்பானி அதானி என அனைத்து தொழிலதிபர்களும் தாங்கள் வாங்கிய கடனில் பெரும்பகுதியை இப்படி ஆடம்பரச் செலவு செய்தவர்களே அம்பானியின் வீட்டை பற்றி பத்தி பத்தியாக பேசாத செய்தித்தாள்கள், ஊடகங்கள் இல்லை சென்னையில் ராமாவரத்தில் மைசூர் அரண்மனை போல ஒரு வணிக வளாகம் கட்டியதை அறியாதவர்கள் உண்டா இப்படி செலவு செய்ய ஒன்று கருப்புப்பணம் இருக்க வேண்டும் இல்லையேல் வங்கிகள் கடன் கொடுக்க வேண்டும் இல்லயேல் எந்த வியாபாரியும் தனது சொந்தப்பணத்தை வியாபாரப் பொருட்களை வாங்க செலவழிப்பானே ஒழிய ஆடம்பரச் கெலவுக்காக போட மாட்டான் அப்பொழுதெல்லாம் அதனைக் கண்டுகொள்ளாத அரசும் எதிர்க்கட்சியும் இப்பொழுது என்னவோ பெரியதாக நடந்துவிட்டதாக கூச்சலிடுகிறது ஊடகங்கள் பெரிது படுத்துகின்றன அண்மையில் ஒரு ஆங்கில நாளிதழில் மல்லையா செய்தது ஒரு குற்றமேயில்லை என்று ஒருவர் கட்டுரை எழுதியிருந்தார் இதுதான் ஆரம்பம் மோடி அரசு வேலியில் போகும் ஓணானை மடியில் கட்டிக்கொள்கிறது அவருக்கு கடன் கொடுத்த வங்கி அதிகாரிகளை இதுவரை எந்த வித விசாரனையோ பதவி விலக்கமோ செய்யவில்லை இன்னேரம் அவர்கள் ஆவணங்களை அழித்திருப்பார்கள் மல்லையா இன்னமும் தனது பணத்தால் எவரையும் விலைக்கு வாங்க முடியும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார் இந்தியாவில் இருந்தால் இந்த நாட்டின் ஒரு தொழிலதிபர் இப்படி அவமானப்படுத்தப்படுவார் என்ற செய்தி வெளியில் பரவினால் எப்படி பன்னாட்டு முதலீடு வரும் என்று கூட அவரது வழக்கறிஞர் கூறலாம் நீதிமன்றமும் அவரை விடுதலை செய்யும் தனது விடுதலையையும் வாங்குவார் அடுத்து தேர்தலில் நின்று வென்று நாட்டின் பிரதமராக ஆனாலும் வியப்பில்லை அவர் வெளிநாட்டுக்கு ஓடிவிட்டார் எனவே அவரது கடனுக்கு ஈடாக அவரது சொத்துக்களைக் கைப்பற்றி கடனை திரும்பப்பெற்றதுடன், அவரை ஒரு ஏமாற்றுப்பேர்வழி இந்தியா வந்தால் கைது செய்யப்படுவார் என்று அறிவித்திருந்தால் அவருக்காக ஒரு லலித மஹாலைக் கட்ட வேண்டாம் பிறருக்கும் அது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் மோடி அரசு வழக்கம் போல வேகமாக செயலாற்றுகிறதாக காட்டிக்கொள்கிறது அதில் விவேகமில்லை என்றறிய நாள் பிடிக்கும்
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-செப்-201805:06:47 IST Report Abuse
Mani . V "இதனை அருண் ஜெட்லி மறுத்துள்ளார். பார்லிமென்ட் வளாகத்தில் ஒரிரு நிமிடங்கள் தான் இந்த சந்திப்பு நடந்தது". அந்த ஓரிரு நிமிடங்களில் "ஜெட்லி சார், நான் லண்டன் தப்பித்துச் செல்கிறேன் - உங்கள் ஏற்பாட்டின் படி. பை, பை சார்" என்று சொல்லி விட்டு செல்ல முடியுமே? அது சரி மல்லையாவை அடைக்க சிறப்பு வசதியுடன் சிறை தயார் செய்வதற்குப் பதில், ஒரு ஐந்து அல்லது ஏழு நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து விட்டால் என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X