நிதிஷ்குமார் கட்சியில் பிரசாந்த் கிஷோர்| Dinamalar

நிதிஷ்குமார் கட்சியில் பிரசாந்த் கிஷோர்

Added : செப் 16, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Prashant Kishor, நிதிஷ்குமார், பிரசாந்த் கிஷோர்

பாட்னா: தேர்தல் வியூக நிபுணர் என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னிலையில், ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார்.
பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சிகள், தேர்தல்களில் வெற்றி பெறும் வகையில், திட்டங்களை வகுத்து கொடுப்பதுடன், பிரசாரத்தை ஒருங்கிணைப்பதில் கில்லாடி என பெயர் பெற்றவர். கடந்த 2012-ம் ஆண்டு குஜராத் சட்டசபை தேர்தலின் போதும், 2014 லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், பா.ஜ., ஆட்சியை பிடிக்க கிஷோர் பணியாற்றினார்; பின்னர் பீஹார் சட்டசபை தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்காக பணியாற்றி, வெற்றியை தேடிக் கொடுத்தார். ஆனால், உ.பி.,யில் அவரது வியூகம் வெற்றி பெறவில்லை. இதனால், சில நாட்கள் அவர் அமைதியாக இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர், தனிநபர்களுக்காக பிரசாரம் செய்த நான், தேர்தல் அரசியலுக்கு தயாராக உள்ளதாக கூறியிருந்தார்.

இந்நிலையில், பாட்னாவில் , பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவருமான நிதிஷ்குமார் முன்னிலையில், அக்கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணைந்தார். அப்போது, பிரசாந்த் தான் கட்சியின் எதிர்காலம் எனக்கூறிய நிதிஷ், ஜீன்ஸ் உடையில் வலம் வரும் பிரசாந்த், அரசியல்வாதி போல் உடை அணிய வேண்டும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaduvooraan - Chennai ,இந்தியா
16-செப்-201819:41:46 IST Report Abuse
Vaduvooraan ஜீன்ஸ் உடையில் வலம் வரும் பிரசாந்த், அரசியல்வாதி போல் உடை அணிய வேண்டும் என்றார் நிதிஷ் /// நடை உடை பாவனை எல்லாவற்றையும் மாற்றிக் கொண்டுதானே ஆக வேண்டும்? ஆனால் பீகார் அரசியலில் ஈடுகொடுக்கும் அளவு கிஷோருக்கு திறமை இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால் ஆரம்பமே சற்று நெருடுகிறதே, அதுதான் கவலைக்குரியது
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
16-செப்-201817:24:40 IST Report Abuse
Loganathan Kuttuva பணப்பட்டுவாடா முறை தமிழகத்தில் அதிகம் மற்ற மாநிலங்களில் குறைவு.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-செப்-201817:05:15 IST Report Abuse
Srinivasan Kannaiya பசையை தேடி காகிதங்கள் பறக்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X