Typhoon aims at south China after killing 28 in Philippines | பிலிப்பைன்சில் சூறாவளி: 28 பேர் பலி| Dinamalar

பிலிப்பைன்சில் சூறாவளி: 28 பேர் பலி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிலிப்பைன்ஸ், சூறாவளி, பலி

மணிலா: பிலிப்பைன்சின் ககாயன் மாகாணத்தில் உள்ள லூஷான் என்ற தீவை 'மங்குட்' என பெயரிடப்பட்ட சூறாவளி, கடுமையாக தாக்கிய பின்னர், பக்காயோ என்ற இடத்தில் கரையை கடந்தது.

இதனால், அங்கு மணிக்கு 305 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. மரங்கள் சாய்ந்தன. மின்விநியோகம் தடைபட்டன. பல வீடுகள் இருளில் மூழ்கியது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைப்பகுதிகளில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த புயலுக்கு 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 மீட்புபடையினரும் அடங்கும். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பிலிப்பைன்சை தாக்கிய இந்த சூறாவளி தெற்கு சீன பகுதியைநோக்கி நகர்ந்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X