தமிழகத்தில் பரவலாக மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பரவலாக மழை

Updated : செப் 16, 2018 | Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
தமிழகம், பரவலாக, மழை

சென்னை: சென்னையின் செங்குன்றம், ஈக்காட்டுத்தாங்கல், கீழப்பாக்கம், அண்ணாநகர, எழும்பூர், வேப்பேரி, மாம்பலம், திநகர், கேகே நகர், வில்லிவாக்கம், கோயம்பேடு, வளசரவாக்கம், வானகரம், ஐய்யப்பன்தாங்கல், கோடம்பாக்கம், கீழப்பாக்கம், ஈக்காட்டுதாங்கல், கொளத்தூர், ஊத்தங்கரை, திருப்போரூர் ,காசிமேடு, திருவொற்றியூர், புதுவண்ணாரப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை, இரவு 7 மணி வரை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் கிருஷ்ணகிரி, திருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யலாம்.கடந்த 24 மணி நேரத்தில், சிவகாசியில் 13 செ.மீ, ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூரில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தி.மலை மாவட்டம் வந்தவாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X