Amit Shah in Rajasthan: Congress ruled for 70 years but never gave backwards their due rights | ஏழைகளின் உரிமையை கொடுக்காத காங்.,: அமித்ஷா| Dinamalar

ஏழைகளின் உரிமையை கொடுக்காத காங்.,: அமித்ஷா

Added : செப் 16, 2018 | கருத்துகள் (13)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பா.ஜ.,அமித்ஷா, காங்கிரஸ், ராகுல்,மோடி

ஜெய்ப்பூர்: இந்தியாவை 70 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ், ஏழைகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளை கொடுக்கவில்லை என பா.ஜ., தலைவர் அமித்ஷா கூறியுள்ளார்.

3 நாள் பயணமாக ராஜஸ்தான் சென்றுள்ள அவர் கூட்டம் ஒன்றில் பேசுகையில், நேரு, இந்திரா, ராஜிவ், சோனியா ஆகியோர், நாட்டை ஆட்சி செய்தனர். ஆனால், பிற்படுத்தப்பட்டோர், ஏழைகள் உரிமைகள் கிடைக்க எதுவும் செய்யவில்லை. பிற்படுத்தபட்ட சமுதாயத்தினருக்கு நீதிகிடைக்க காங்கிரஸ் ஒரு போதும் உழைத்தது கிடையாது. ஆனால், மோடி அரசு அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைத்து வருகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய கமிஷனுக்கு பா.ஜ., அரசு தான் அரசியல் சாசன அங்கீகாரம் அளிக்கும் மசோதாவை நிறைவேற்றியது. பா.ஜ., குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கான கட்சி கிடையாது. இது தான் பா.ஜ.,வின் சிறப்பு ஆகும்.
மாநிலத்தில் வசுந்தரா ஆட்சியில் விவசாயிகளுக்கு ஏராளமான திட்டங்கள் செய்துள்ளது. 50 ஆயிரம் ரூபாய் வரை விவசாயிகள் கடன் ரத்து செய்யப்பட்டது. மத்திய அரசு, பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை 1.5 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், 70 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த விவசாயிகளின் பொருட்களுக்கு விலை கிடைக்க ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என நான் ராகுலிடம் கேள்வி கேட்க விரும்புவதாக கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-செப்-201816:51:21 IST Report Abuse
Malick Raja 2014.தேர்தலில் காங்கிரஸ் 45.இடங்களை பிடித்தது .. 2019.ல் பிஜேபி 4. அல்லது 5. இடங்களை பிடிப்பது மட்டும் உறுதி எரிபொருள் விலை உயர்வு ஒன்று போதும் பிஜேபிக்கு ஆப்படிக்க .. ஒரு பாம்பை பிடித்து அமித் சா கையில் கொடுத்துவிட்டால் போதும் அசல் பாம்பாட்டி போல ஆகிவிடுவார் .. பிஜேபி ஆட்சியின் க்ளைமாக்ஸ் காட்சியில் அமித்சா பாம்பாட்டியாகிவிட்டார் வாழ்த்துக்கள் ..
Rate this:
Share this comment
Cancel
Sasidaran - Chennai,இந்தியா
17-செப்-201800:41:54 IST Report Abuse
Sasidaran //ஏழைகளின் உரிமையை கொடுக்காத// அது ஏழைகளின் உரிமையை கெடுக்காத காங்கிரஸ் .. அவர்கள் ஆட்சியில் ஊழல் இருந்தது .. ஆனால் எந்த உரிமையையும் பறிக்க வில்லை .. நீங்க ஆட்சிக்கு வந்து கார்பரேட்கள் கொள்ளை அடிக்கடி வழி செய்து , மக்கள் உரிமையும் பறிக்கிறீர்கள் .. எதிர் கேள்வி கேட்டால் உடனே தீவிரவாதி , நக்சலைட் , என்று ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டியது .. எவ்வளவு நாள் என்று பார்ப்போம்
Rate this:
Share this comment
Cancel
17-செப்-201800:27:28 IST Report Abuse
ஆப்பு மொதல்ல ஊருக்கு ஏத்த மாதிரி தலப்பா கட்டுறதை நிறுத்துங்க....கபடமாகத் தெரியுது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X