பேரையூருக்கு டவுண் பஸ் வசதி: எதிர்பார்ப்பில் ஸ்ரீவி., பயணிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேரையூருக்கு டவுண் பஸ் வசதி: எதிர்பார்ப்பில் ஸ்ரீவி., பயணிகள்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து ஆயர்தர்மம் செல்லும் டவுண் பஸ்களை தடநீட்டிப்பு செய்து பேரையூர் வரை இயக்கவேண்டும் என ஸ்ரீவில்லிபுத்துார் பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போது கிருஷ்ணன்கோயில், குன்னுார் வழியாக ஆயர்தர்மத்திற்கு டவுண் பஸ்கள் இயங்கி வருவதால், பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், மாணவர்கள் பயணித்து வருகின்றனர்.
ஆயர்தர்மத்திலிருந்து சுமார் 10 கி.மீ துாரத்திற்குள் இருக்கும் பேரையூர் வரை இந்த டவுண் பஸ்கள் இயங்கினால், அக்கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மதுரைக்கும், தேனிக்கும் எளிதில் பயணிக்கலாம். பயண நேரம் மற்றும் கட்டணம் குறைவாக இருப்பதால், அதிகளவில் பயணிகள் பயணித்து, அரசு போக்குவரத்து கழகத்திற்கு கூடுதல் வருவாய் கிட்டும்.எனவே தற்போது ஸ்ரீவில்லிபுத்துாரிலிருந்து ஆயர்தர்மம் வரை இயங்கும் டவுண் பஸ்களை பேரையூர் வரை தடநீட்டிப்பு செய்து இயக்க, அரசு போக்குவரத்து கழகமும், மக்கள் பிரதிநிதிகளும் ஆவண செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின் றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X