பராமரிப்பு அவசியமே... திறந்தவெளியால் பரவுது தொற்று நோய்| Dinamalar

தமிழ்நாடு

பராமரிப்பு அவசியமே... திறந்தவெளியால் பரவுது தொற்று நோய்

Updated : செப் 16, 2018 | Added : செப் 16, 2018
Advertisement

நரிக்குடி:திறந்துவெளி கழிப்பறையை ஒழிக்க, பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட சுகாதார வளாகங்கள், போதிய பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்து வருவதால், திறந்தவெளி பயன்பாடு குறைந்தபாடில்லை.தற்போது பெய்து வரும் பருவமழையால், தொற்றுநோய் பரவும் வாய்ப்புள்ளதால் தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.மாவட்டத்தில் கிராமப்புறங்களில் ஊரின் நுழைவு வாயிலை திறந்தவெளி கழிப்பறையை பயன்படுத்துகின்றனர்.
துர்நாற்றம் ஏற்பட்டு, அப்பகுதியில் நடப்பவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. தற்போது பெய்யும் பருவமழைக்கு, நீர்நிலைகளுக்கு செல்லும் மழைநீரில் தொற்றுகிருமிகள் உருவாகலாம். இதனை பயன்படுத்தும் மக்கள் கால்நடைகள் பாதிப்பை சந்திக்க நேரிடும் நிலை உள்ளது.கழிவுநீரில் உண்டாகும் கொசுக்கள் மூலம் நோய் பரவி,மலேரியா, வைரஸ் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படலாம்.
திறந்து வெளி கழிப்பறையை முற்றிலும் தடுக்க வேண்டும் என அரசு, சுகாதாரத்திற்காக பல்வேறு திட்டங்களின் மூலம், ஒவ்வொரு கிராமத்திற்கும் ரூ.15 முதல் 22 லட்சம் வரை அனைத்து வசதிகளுடன் கூடிய சுகாதார வளாகம் கட்ட நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து சுகாதார வளாகத்தை பயன்படுத்தியதால், திறந்துவெளி பயன்பாடு ஓரளவிற்கு குறைந்தது.இந்நிலையில் சுகாதார வளாகம் பயன்பாட்டிற்கு வந்த 6 மாதத்திலே கதவுகள் பெயர்ந்தன. மின் மோட்டார் பழுதானது. நிர்ணயிக்கப்பட்ட ஆழத்திற்கு,ஆழ்துளை கிணறு போடாததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. அனைத்தும் செயலிழந்து போனதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் மக்கள் வேறு வழியில்லாமல் மீண்டும் திறந்தவெளியை நாடுகின்றனர். தற்போது பருவமழை பெய்து வருவதால் தொற்றுநோய் பரவும் வாய்ப்பு உள்ளது. திறந்த வெளி பயன்பாட்டை தடுக்க, சுகாதார வளாகங்களில் பராமரிப்புப் பணிகளை செய்ய வேண்டியது அவசியமாகிறது.

வாரத்திற்கு ஒரு முறை சுத்தம் செய்யுங்க
சுகாதார வளாகங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. பெரும்பாலான சுகாதார வளாகங்களில் தண்ணீர் பிரச்னையால் முடங்கியுள்ளது.உள்ளூர் நிர்வாகத்திலிருந்து தண்ணீர் சப்ளை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். அடிப்படை வசதி முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திறந்தவெளி பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.-அழகர்சாமி, சமூக ஆர்வலர், காரியாபட்டி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X