பொது கட்டட விதிகளில் 14 திருத்தங்கள் : தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொது கட்டட விதிகளில் 14 திருத்தங்கள் : தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

'தமிழக அரசு உருவாக்கியுள்ள, பொது கட்டட வரைவு விதிகளில், 14 அம்சங்களை சேர்க்கும் வகையில், திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், அனைத்து உள்ளாட்சிகளிலும், கட்டட அனுமதியை முறைப்படுத்த, பொது கட்டட வரைவு விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இந்த வரைவு விதிகள், ஜூலை, 26ல், வெளியிடப்பட்டன. அவற்றின் மீது, ஆகஸ்ட், 20 வரை, பொதுமக்களிடம் கருத்துகள் பெறப்பட்டன. இந்தக் கருத்துகளை ஆராய, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஆறு பேர் இடம் பெற்ற குழுவும், அவர்களுக்கு உதவ, தொழில்நுட்ப குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை செயலரும், 'அம்ரூத்' எனப்படும், நகர்ப்புற சீரமைப்பு திட்ட இயக்குனருமான, சிவ்தாஸ் மீனா, தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதம்: தமிழக அரசு உருவாக்கி உள்ள, பொது கட்டட வரைவு விதிகளில், 'அம்ரூத்' திட்டத்துக்காக, மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்த பரிந்துரைகள் இடம் பெறுவது அவசியம். மேலும், மத்திய அரசு, 2016ல் வெளியிட்ட, மாதிரி கட்டட விதிகளில் பல, பொது கட்டட விதிகளில் சேர்க்கபடவில்லை. அத்துடன், பொது கட்டடங்களுக்கு வந்து செல்வோருக்கான சுகாதார வசதி கள், மூத்த குடிமக்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு வசதிகள், 30 நாட்களில், ஒற்றை சாளர முறையில் வழங்குதல் உள்ளிட்ட விஷயங்களும், பொது கட்டட வரைவு விதிகளில் சேர்க்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார். மத்திய அரசின் திடீர் உத்தரவால், பொது கட்டட வரைவு விதிகளில், 14 இடங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டிய கட்டாயம், தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X