அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பா.ஜ., பாடுபடுகிறது: அமித் ஷா Dinamalar
பதிவு செய்த நாள் :
அனைத்து பிரிவு மக்களுக்காகவும்
பா.ஜ., பாடுபடுகிறது: அமித் ஷா

ஜெய்ப்பூர்:''அனைத்து தரப்பு மக்களுக்காகவும், பா.ஜ., சேவை செய்கிறது,'' என, அக்கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா கூறினார்.

அனைத்து,பிரிவு,மக்களுக்காகவும், பா.ஜ., பாடுபடுகிறது,அமித்ஷா


ராஜஸ்தான் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இங்குள்ள பாலி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., தலைவர் அமித் ஷா பேசியதாவது:பா.ஜ.,எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கோ, சமூகத்துக்கோ,

சொந்தமான கட்சியல்ல. அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தான், பா.ஜ., பாடுபடுகிறது.


பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டம்,அனைத்து மக்களுக்கும் பொருந்தும். நாட்டில் உள்ள அனைவரும், வளர்ச்சியின் பலனை பெற வேண்டும் என்பதே, மத்திய அரசின் நோக்கம்.கடந்த லோக்சபா தேர்தலில், மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைய, ராஜஸ்தான் மக்கள், பெரும் உதவி செய்தனர். மொத்தம் உள்ள, 25லோக்சபா தொகுதிகளிலும், பா.ஜ.,வே வெற்றிபெற்றது.மீண்டும் அப்படி ஒரு வெற்றியை, மக்கள் நிச்சயம் தருவர்.


நாட்டை, நேரு குடும்பத்தின், நான்கு தலைமுறை கள் ஆட்சி செய்துள்ளன. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்கு, எந்த நடவடிக்கையும்

Advertisement

எடுக்கவில்லை.ஆனால், பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு, அரசியல் சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது, மோடி அரசு. விவசாயிகளின் நலனுக்காகவே, பயிர்களுக் கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, மோடி அரசு உயர்த்தி உள்ளது.இவ்வாறு, அமித் ஷா பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (23+ 14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

எட்வின்,திருநெல்வேலிஉண்மைதான்... பாடாய்ப்படுகிறது...

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
17-செப்-201818:11:34 IST Report Abuse

தமிழ் மைந்தன் ஏழைகளை இலவசம் என்ற பெயரில் சிறிய தொகையை வழங்கிவிட்டு பெரிய அளவில் கொள்ளையடித்து இத்தாலி லண்டன் என சொத்துக்களை குவித்துவிட்டு இப்பொழுது கபட நாடகத்தை காங்கிரஸ் மற்றும் தி.மு.க வின் ஸ்டாலின் அணி சிறப்பாக நடத்திவருகிறது

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-செப்-201813:44:18 IST Report Abuse

Malick Rajaமனோகர் பாரிக்கர் எப்படி இருந்தார் என்னவெல்லாம் செய்தார் பலவிதமான சேவைகளை செய்தவர் இன்று அவருக்கு மற்றவர்கள் சேவை செய்யும் அளவுக்கு வந்துள்ளது அமித்சா பார்க்கிறார் .. நன்றாக தெரிகிறது ஆனால் நமக்கும் இது போன்றுதான் இறுதிவரும் என்ற நினைப்பு மட்டும் வர மறுக்கிறது இது ஒவ்வொரு மனிதனின் இயல்பு .. ஆனால் ஒவ்வொரு மனிதனும் இதை சந்தித்தே ஆகவேண்டும் .. அரசியல்வாதிகள் மனிதர்களாக இருந்தால் மட்டுமே சிந்திப்பார்கள்

Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X