6,877 குறைந்த விலை வீடுகள் வீட்டுவசதி வாரியம் திட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

6,877 குறைந்த விலை வீடுகள் வீட்டுவசதி வாரியம் திட்டம்

Updated : செப் 16, 2018 | Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

- நமது நிருபர் -சென்னை, திருவொற்றி யூரை அடுத்த எர்ணாவூரில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக, வீட்டுவசதி வாரியம், 6,877 வீடுகளை கட்ட உள்ளது. இதற்கான வடிவமைப்பாளரை, தேர்வு செய்யும் பணிகள் துவங்கி யுள்ளன.தமிழகத்தில் வீட்டு வசதி வாரியம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில், குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்கள் அனைத்தும், உயர் வருவாய், நடுத்தர வருவாய், குறைந்த வருவாய் பிரிவினருக்கு என, வகை பிரித்து கட்டப்படும்.விண்ணப்பங்கள் வழங்கி, குலுக்கல் வாயிலாக, ஒதுக்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இதில் சிறப்பு நிகழ்வாக, முழுவதும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக, ஒரு குடியிருப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இதன்படி, திருவொற்றியூரை அடுத்த, எர்ணாவூர் பகுதியில், 6,877 வீடுகள் கட்டுவதற்கு, வீட்டுவசதி வாரியம் திட்டமிட்டது. இதற்கு தேர்வு செய்யப்பட்ட நிலத்தை, தொழிற்சாலை பயன்பாட்டுக்கான வகைபாட்டில் இருந்து, கலப்பு குடியிருப்பாக மாற்றும், சி.எம்.டி.ஏ.,விடம், வீட்டுவசதி வாரியம் விண்ணப்பித்துள்ளது.இந்நிலையில், இத்திட்டத்துக்கான வடிவமைப்பாளரை தேர்வு செய்யும் பணிகளை, வீட்டுவசதி வாரிய அதிகாரிகள் துவக்கியுள்ளனர். வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டவுடன், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு குழுமத்தின் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள, வீட்டுவசதி வாரியம் திட்டமிட்டுள்ளது.-இத்திட்டங்கள் அனைத்தும், உயர் வருவாய், நடுத்தர வருவாய், குறைந்த வருவாய் பிரிவினருக்கு என, வகை பிரித்து கட்டப்படும்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X