ஐக்கிய ஜனதா தளத்தில் பிரசாந்த் கிஷோர் ஐக்கியம் Dinamalar
பதிவு செய்த நாள் :
ஐக்கிய ஜனதா தளத்தில்
பிரசாந்த் கிஷோர் ஐக்கியம்

பாட்னா: பா.ஜ., உட்பட பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வடிவமைத்து கொடுத்த, தேர்தல் நிபுணர் பிரஷாந்த் கிஷோர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம், பிரசாந்த், கிஷோர், ஐக்கியம்


பீஹார் மாநிலத்தைச் சேர்ந்தவரான, தேர்தல் நிபுணர், பிரஷாந்த் கிஷோர், 41, பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வடிவமைத்து கொடுத்துள்ளார்.கடந்த, 2014ல், நடந்த லோக்சபா தேர்தலின்போது, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடிக்காக,

அவர் தேர்தல் வியூகங்களை வடிவமைத்து கொடுத்தார்.அந்தத் தேர்தலில், பா.ஜ., மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதும், பிரஷாந்த் கிஷோர், மிகவும் பிரபலமானார்.


கடந்த, 2015ல், பீஹாரில் நடந்த சட்டசபை தேர்தலின் போது, ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்காக பணியாற்றினார்.காங்கிரஸ்,ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தது. முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற நிதிஷ் குமார், கேபினட் அமைச்சர் அந்தஸ்து உள்ள ஆலோசகர் பதவியில், பிரஷாந்த் கிஷோரை நியமித்தார்.


அதைத் தொடர்ந்து, பஞ்சாபில் நடந்தசட்டசபை தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சிக்காக பிரஷாந்த் பணியாற்றினார்.காங்.,அமோக வெற்றி பெற்றது.

Advertisement

உ. பி.,சட்டசபை தேர்தலின் போது, சமாஜ்வாதி கட்சிக்கு வியூகங்களை வகுத்து தந்தார். ஆனால், சமாஜ்வாதி படு தோல்வி அடைந்தது. லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பிரஷாந்த் கிஷோர் இணைந்து உள்ளார். பீஹார் முதல்வரும், கட்சி தலைவரு மான நிதிஷ்குமார் முன்னிலையில், அவர் கட்சியில் நேற்று இணைந்தார்.ஆனால், அவருக்கு கட்சி யில் என்ன பதவி என்பது போன்ற விபரங்கள் அறிவிக்கப்படவில்லை.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamil - coonoor,இந்தியா
17-செப்-201808:38:08 IST Report Abuse

tamilஅனைவருமே வியூகம் வகுத்து வருகிறார்கள் காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதை தான், அந்த காலத்தில் யார் ஐடியா கொடுத்து காங்கிரஸ், தி.மு.க, எம்.ஜி.ஆர்., ஜெ எல்லாம் ஜெயிச்சி வந்தார்கள், அனைத்துக்கும் மக்கள் ஆதரவு வேண்டும்,

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-செப்-201808:23:48 IST Report Abuse

Srinivasan Kannaiyaபிரசாந்த் கிஷோர் வேறு எங்கேயும் விலை போகவில்லை போல உள்ளது...

Rate this:
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
17-செப்-201804:32:16 IST Report Abuse

Kasimani Baskaranவாக்காளர்கள் போட்டியிடுபவர்களை முதலில் நம்பவேண்டும்... வியூகம் வகுத்தவர்களை அல்ல... மோடிக்கு அடிமட்டத்தில் உள்ளவர்களின் ஆதரவு வெகுவாக கூடி இருக்கிறது..

Rate this:
Karthik - Chennai,இந்தியா
17-செப்-201809:53:33 IST Report Abuse

Karthikநீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X