தூய்மை பணியில் இந்திய கடற்படை வீரர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியில் இந்திய கடற்படை வீரர்கள்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:சர்வதேச கடற்கரை துாய்மை தினத்தை முன்னிட்டு, இந்திய கடற்படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர், பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்ரையை, நேற்று சுத்தம் செய்தனர்.சர்வதேச கடற்கரை துாய்மை தினத்தின் ஒரு பகுதியாக, இந்திய கடற்படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் என, 400க்கும் மேற்பட்டோர், பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையை, நேற்று சுத்தம் செய்தனர்.'குப்பை இல்லா கடலுக்காக போராடு வோம்' என்ற தலைப்பில், அவர்கள், துாய்மை பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணியை, தமிழ்நாடு, புதுச்சேரி கடற்பகுதியின், கொடி அதிகாரி, அலோக்பட்னாகர் துவக்கி வைத்தார்.இதில், கடற்கரையை துாய்மையாக வைத்திருப்பது, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து, பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.துாய்மை பணியில், 3 டன் குப்பை சேகரிக்கப்பட்டது என, சென்னை, பாதுகாப்பு துறையின், பத்திரிகை அலுவலகம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X