புதிய, 'ஜன்தன்' திட்டத்தில் 20 லட்சம் பேர் சேர்ந்தனர் Dinamalar

பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
புதிய, 'ஜன்தன்' திட்டத்தில்
20 லட்சம் பேர் சேர்ந்தனர்

புதுடில்லி: புதிய, 'ஜன்தன்' திட்டத்தின் கீழ், 20 நாட்களில், 20 லட்சம் பேர், புதிதாக வங்கி கணக்கை துவங்கியுள்ளனர். இதையடுத்து, ஜன்தன் திட்டத்தின் கீழ், வங்கிக் கணக்கு துவங்கியோரின் எண்ணிக்கை, 32.61 கோடியாக உயர்ந்துள்ளது.

புதிய,ஜன்தன், திட்டத்தில், 20 லட்சம் பேர், சேர்ந்தனர்


மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: 'அனைத்து குடும்பங்களுக்கும் ஒரு வங்கிக் கணக்கு துவக்கப்பட வேண்டும்' என, 2014

ஆகஸ்டில், 'ஜன்தன்' திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது. இந்த திட்டத்தின்கீழ் வங்கிக் கணக்கு துவங்குவோருக்கு, 1 லட்சம் ரூபாய் விபத்து காப்பீட்டுடன் கூடிய, 'ருபே' கடன் அட்டைகள் வழங்கப்பட்டன.

இதைத் தவிர, 'ஓவர்டிராப்ட்' எனப்படும், வங்கி கணக்கு இருப்பில் பணம் இல்லாவிட்டாலும், 5,000 ரூபாய் வரை பணம் எடுக்கும் சலுகை அளிக்கப் பட்டது. நான்கு ஆண்டுகள் செயல்படுத்தப் பட்ட இந்த ஜன்தன் திட்டம், சில திருத்தங்களுடன், கடந்த மாதம், புதிதாக அறிவிக்கப்பட்டது. இந்த திருத்தப் பட்ட, புதிய ஜன்தன் திட்டத்தின்கீழ், விபத்து காப்பீடு, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப் பட்டது. இதைத் தவிர, 10 ஆயிரம் ரூபாய் வரை, ஓவர்டிராப்ட் வசதி அளிக்கப்படுகிறது.

கடந்த மாதம், 15ம் தேதியில் இருந்து, இந்த மாதம், 5ம் தேதி வரையிலான காலத்தில், 20 லட்சம் பேர்

Advertisement

புதிதாக வங்கி கணக்கை துவங்கியுள்ளனர். ஜன்தன் திட்டத்தின் கீழுள்ள, 32.61 கோடி வங்கிக் கணக்குகளில், இந்த காலத்தில் மட்டும், 1,266 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வங்கிக் கணக்கில், மொத்தம், 82 ஆயிரத்து, 490 கோடி ரூபாய் இருப்பு உள்ளது.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,இந்தியா
17-செப்-201816:07:47 IST Report Abuse

sahayadhas82000 கோடியா ,ஆளுக்கு 1 கோடி வைச்சு கொடுத்தாலும். 130 கோடி தானே வரும். மீதியை நீ என்ன வேணுனாலும் பண்ணிக்கோ . ஒரு வேலையும் வேண்டாம் எந்த free ம் வேண்டாம்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-செப்-201808:24:30 IST Report Abuse

Srinivasan Kannaiyaஎல்லாமே கட்சிகார்கள்தானே

Rate this:
17-செப்-201815:46:58 IST Report Abuse

பாலா32 கோடி பேர்களை சொல்கிறீர்களா?...

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
17-செப்-201807:37:34 IST Report Abuse

ஆரூர் ரங்ரேஷன் இலவச அரிசி பையில கருணா படமும் ஜெயா படமும் போட்டுக்கொடுத்தமாதிரி ஜன்தன் கணக்கு பாஸ்புக்கில மோடி தனது போட்டோவை போட்டுக்கல பிழைக்கத்தெரியாத மனிதர்

Rate this:
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
17-செப்-201815:48:17 IST Report Abuse

N.Kaliraj ஒரு கையில் சோப்பு.....மறு கையில் ஆப்பு......

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X