கோல்கட்டாவில் தீ விபத்து: பல கோடி ரூபாய் சேதம்| Dinamalar

கோல்கட்டாவில் தீ விபத்து: பல கோடி ரூபாய் சேதம்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கோல்கட்டாவில் தீ விபத்து: பல கோடி ரூபாய் சேதம்

கோல்கட்டா: கோல்கட்டாவில், பக்ரீ மார்க்கெட்டில் நேற்று, பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. இந்த விபத்தில், பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் சேதமடைந்தன.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் கோல்கட்டாவில், புர்ரா பஜார் பகுதியில் அமைந்துள்ள, பக்ரீ மார்க்கெட், மிகவும் பிரபலமானது.இங்கு, ஐந்து மாடிகள் உடைய வணிக வளாகம் உள்ளது. இந்த வளாகத்துக்குள், ௧௦௦க்கும் அதிகமான கடைகள் உள்ளன.நேற்று அதிகாலை, இந்த வளாகத்தின் தரை தளத்தில் தீப்பிடித்தது. காற்றின் வேகத்தில், அடுத்தடுத்த மாடிகளுக்கும் தீ பரவியது. தகவல் அறிந்து, 35 வண்டி களில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வணிக வளாகத்தில் இருந்தவர்கள், பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். ஒன்பது மணி நேரத்துக்கு மேலாக, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த விபத்தில், உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. எனினும், பல கோடி ரூபாய் மதிப்பு பொருட்கள் நாசமடைந்துவிட்டன. இந்த விபத்தில் தீயணைப்பு படையினர் சிலருக்கு காயம் ஏற்பட்டது.மின் கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.முதல்வர் மம்தா பானர்ஜி, ஜெர்மனி, இத்தாலி நாடுகளில் நடக்கும் வர்த்தக மாநாட்டில் பங்கேற்க, நேற்று காலை புறப்பட்டுச் சென்றார். அவர் கூறுகையில், ''தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்துக்குள், யாரும் சிக்கியிருக்கவில்லை. உயிர் சேதம் ஏற்பட்டதாகவும், யாரும் காயம் அடைந்ததாகவும் தகவல் இல்லை,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X