இறைச்சி கழிவுகளால் தொற்றுநோய் பீதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இறைச்சி கழிவுகளால் தொற்றுநோய் பீதி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பம்மல்:பம்மல், எம்.ஜி.ஆர்., சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ள, தோல் மற்றும் இறைச்சி கழிவுகளால், தொற்றுநோய் பரவும் பீதியில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.பம்மல் நகராட்சிக்குட்பட்ட நாகல்கேணியில், 100க்கும் அதிகமான தோல் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், தோல் கழிவுகள் ஆகியவை முறையாக அகற்றப்படுவதில்லை. ஆலையில் உருவாகும் கழிவுநீரை முறையாக சுத்திகரிக்காமல், அப்பகுதி சாலையோர மழைநீர் வடிகாலில் விடுகின்றனர். குறிப்பாக, எம்.ஜி.ஆர்., சாலையோரத்தில், சிறு சிறு மூட்டைகளில் அடைக்கப்பட்ட தோல் கழிவுகள், அதிகளவில் வீசப்படுகின்றன.மழைநீர் வடிகாலில் வெளியேற்றப்படும் கழிவு நீரில் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகும் நிலையில், தோல் கழிவுகள் அடைக்கப்பட்ட பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தோல் மற்றும் இறைச்சி கழிவுகளை அகற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X