இருளில் எம்.ஜி.ஆர்., நகர் பெட்ரோல் திருட்டு, 'ஜோர்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இருளில் எம்.ஜி.ஆர்., நகர் பெட்ரோல் திருட்டு, 'ஜோர்'

Updated : செப் 16, 2018 | Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

வியாசர்பாடி:எம்.ஜி.ஆர்., நகர், கு.மா.வாரிய குடியிருப்புகளில், மின்விளக்குகள் எரியாததால், வீடுகள் முன் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் இருந்து, நள்ளிரவில், பெட்ரோல் திருடு போவது அதிகரித்துள்ளது.சென்னை, வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்.,நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இங்கு, 'ஏ' முதல் 'இ' வரை 'பிளாக்'குகள் உள்ளன. ஏ, பி பிளாக்குகளில், தலா, 50 குடியிருப்புகளும்; சி, டி, இ பிளாக்குகளில், தலா, 36 குடியிருப்புகளும் உள்ளன. இப்பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால், வீடுகள் முன் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் இருந்து, மர்மநபர்கள், பெட்ரோல் திருடி செல்வது அதிகரித்துள்ளது.இதுகுறித்து, எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த தேவி, 32, கூறியதாவது:இப்பகுதியில், லாரி மூலம் முறையாக தண்ணீர் வினியோகம் செய்யப்படுவதில்லை. குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டும், நடவடிக்கை இல்லை.ஆறு மாதங்களாக, இப்பகுதியில் உள்ள, 20க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் எரிவதில்லை. நள்ளிரவில் திருட்டு, வழிப்பறிகள் அதிகரித்துள்ளன.நள்ளிரவில் வரும் மர்மநபர்கள், வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களில் இருந்து பெட்ரோல் திருடிச் செல்கின்றனர். தெருவிளக்குகள் அமைத்து தரக்கோரி, மாநகராட்சி அதிகாரிகளிடம், பலமுறை முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, குடிநீர் வாரிய அதிகாரி கூறியதாவது:எம்.ஜி.ஆர்., நகரில், மின்மோட்டார் பழுது ஏற்பட்டுள்ளது. தற்போது பழுது சரிபார்க்கப்பட்டுள்ளது. ஓரிரு நாள்களில், தண்ணீர் வினியோகம் சீராகும். மேலும், குடிநீர் சப்ளை செய்யும் லாரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.--எம்.ஜி.ஆர்.,நகர் கு.மா.வாரிய குடியிருப்பில், எரியாத தெருவிளக்குகள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஓரிரு வாரங்களில், இப்பிரச்னை சரி செய்யப்படும்.மாநகராட்சி உயரதிகாரி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X