வாறுகாலை தூர்வாரினாலே...'கிளீன்' உறுதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாறுகாலை தூர்வாரினாலே...'கிளீன்' உறுதி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சிவகாசி:சிறிய மழைக்கே நகர் முழுவதும் கழிவுநீர் ரோட்டிலும், தெருவிலும் ஆறாய் ஓடி சுகாதாரகேட்டை ஏற்படுத்துகிறது. சிவகாசி நகரில் முக்கியமான பெரும்பாலான தெருக்கள் , ரோட்டில் வாறுகால் முறையாக அமைக்கப்படாததால், கழிவுநீர் தெருவில் ஓடி மாசுள்ள சூழலை ஏற்படுத்துகிறது. மழைக்காலங்களில் மழைநீரோடு, கழிவுநீரும் கலப்பதை தடுத்தாலே 'மாசில்லா சிவகாசி' என்பது சாத்தியமாகும்.
சிவகாசியில் சமீபத்தில் பெய்த மழையில் நகர் முழுவதுமே கழிவுநீரால் தத்தளிக்கிறது. என்.ஆர்.கே.ஆர்., ரோடு, அம்மன்கோவில்பட்டி, புதுத்தெரு, வெம்பக்கோட்டை விளாம்பட்டி சந்திப்பு ரோடு, பைபாஸ் ரோடு, தண்ணீர் டேங்க் உள்ளிட்ட சிவகாசியில் பல்வேறு பகுதிகள் தாழ்வாக அமைந்துள்ளது. சாதாரணமாக நகரில் வாறுகால் முறையாக துார்வாரப்படுவதில்லை. இதனால் அவ்வப்போது கழிவுநீர் தெருப்பகுதிகள் மற்றும் ரோடுகளில் ஓடும். மழை பெய்தால் சொல்லவே வேண்டாம். நகரின் மொத்த கழிவுகளும் தெருக்களிலும், ரோட்டிலும் தான் ஓடுகின்றது. தண்ணீர் டேங்க் பகுதியில் முறையாக வாறுகால் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறிய மழைக்கே, கழிவுநீர் வாறுகாலை விட்டு வெளியேறி ரோட்டில் ஓடியது. இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். பஸ் உள்ளிட்ட வாகனங்கள் ரோட்டில் செல்லும் போது, நடந்து செல்பவர்கள் மற்றும் டூவீலரில் செல்பவர்கள் மீது தெளிக்கிறது.
அம்மன்கோவில்பட்டி பகுதியில் சிறிய மழைக்கே கழிவுநீர் வீட்டிற்குள் புகுந்து விடுகிறது. இதில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்றுநோயை பரப்புகிறது. இதேபோல் பைபாஸ் ரோடு தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதால் , மழைக்காலங்களில் நகரின் மொத்த கழிவுகளும் ஒரே இடத்தில் தேங்கி விடுகிறது. இதில் ரோடு இருப்பதே தெரியாமல் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. வெம்பக்கோட்டை விளாம்பட்டி ரோடு பகுதிகளிலும் கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. மேலும் இப்பகுதியில் வரத்துக் கால்வாய்கள் முறையாக துார்வாரப்படாமல் குப்பைகளால் நிறைந்துள்ளது.
இதனால் மழை பெய்யும் பொழுது கழிவுநீரோடு சேர்ந்து மழைநீரும் ரோட்டிற்கு வந்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம் வாறுகால், வரத்துக்கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படாததே. வாரம் ஒருமுறையாவது வாறுகால் முறையாக துார்வாரப்பட்டால் கழிவுநீர் தேங்காமல் ஓடி விடும். இதற்கு பொது மக்களும் ஒத்துழைப்புத் தர வேண்டும். நகராட்சியிலிருந்து குப்பை கொட்ட தொட்டிகள் வைத்தாலும் மக்கள் அதனை முறையாகப் பயன்படுத்துவதில்லை. பாலிதீன் உள்ளிட்ட குப்பையை ஆங்காங்கே வீசி விடுகின்றனர். இவைகள் வாறுகாலை அடைத்து கழிவுநீரை வெளியேறாமல் தேங்கச் செய்கிறது. இதே நிலை தொடர்ந்து நீடித்தால் நகர் எப்பொழுதும் மாசு நிறைந்ததாகவே இருக்கும். எனவே மாசற்ற சிவகாசி என்பது நம் கையில் தான் உள்ளது.


ஒத்துழைப்போம்... உறுதி எடுப்போம்

சிவகாசியில் சிறிய மழை பெய்தாலே கழிவுநீர் ரோட்டிற்கு வந்து விடுகிறது. வெறும் கழிவுநீர் மட்டுமல்லாது, திடக்கழிவுகள், குப்பையும் ரோட்டிற்கு வந்து விடுகிறது. இது நகரை மாசுபடுத்துவதோடு மட்டுமல்லாது மக்களுக்கு தொற்றுநோயையும் பரப்புகிறது. வாறுகால் மற்றும் வரத்துக்கால்வாய்கள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும். பொதுமக்களும் ஒத்துழைப்புத் தர வேண்டும். குப்பையை கண்ட இடங்களில் கொட்டாமல் முறையாக குப்பைத் தொட்டிகளில் கொட்ட வேண்டும். இதற்கு ஒத்தழைப்புத் தந்தால் மாசில்லா சிவகாசியை உருவாக்கலாம்.-சதீஸ்ராஜன், சமூக ஆர்வலர், சித்துராஜபுரம்



பாதாள சாக்கடை திட்டம் அவசியம்
நகரில் உள்ள பெரும்பாலான பகுதிகள் தாழ்வாக உள்ளது. இதனால் சிறிய மழை பெய்தாலும் கழிவுநீர் ரோட்டிற்கு வந்து விடுகிறது. நகராட்சியில் ஏற்கனவே பாதாள சாக்கடை திட்டம் அமைக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் பரிசீலனையோடு நின்று விட்டது. சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பொழுது தொலைநோக்கு திட்டத்தில் பாதாள சாக்கடை திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்.-வெங்கடேஷ், இயற்கை ஆர்வலர், சிவகாசி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X