அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பா.ஜ., பாடுபடுகிறது: அமித் ஷா| Dinamalar

அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பா.ஜ., பாடுபடுகிறது: அமித் ஷா

Added : செப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பா.ஜ., பாடுபடுகிறது: அமித் ஷா

ஜெய்ப்பூர்: ''அனைத்து தரப்பு மக்களுக்காகவும், பா.ஜ., சேவை செய்கிறது,'' என, அக்கட்சியின் தேசிய தலைவர், அமித் ஷா கூறினார்.
ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.இங்குள்ள பாலி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், பா.ஜ., தலைவர் அமித் ஷா பேசியதாவது:பா.ஜ.,எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கோ, சமூகத்துக்கோ, சொந்தமான கட்சியல்ல. அனைத்து தரப்பு மக்களுக்காகவும் தான், பா.ஜ., பாடுபடுகிறது.பிரதமர் மோடியின் வளர்ச்சி திட்டம், அனைத்து மக்களுக்கும் பொருந்தும். நாட்டில் உள்ள அனைவரும், வளர்ச்சியின் பலனை பெற வேண்டும் என்பதே, மத்திய அரசின் நோக்கம்.கடந்த லோக்சபா தேர்தலில், மத்தியில், பா.ஜ., ஆட்சி அமைய, ராஜஸ்தான் மக்கள், பெரும் உதவி செய்தனர். மொத்தம் உள்ள, ௨௫ லோக்சபா தொகுதிகளிலும், பா.ஜ.,வே வெற்றி பெற்றது. மீண்டும் அப்படி ஒரு வெற்றியை, மக்கள் நிச்சயம் தருவர்.நாட்டை, நேரு குடும்பத்தின், நான்கு தலைமுறைகள் ஆட்சி செய்துள்ளன. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், பிற்படுத்தப்பட்டோர் கமிஷனுக்கு, அரசியல் சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது, மோடி அரசு. விவசாயிகளின் நலனுக்காகவே, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, மோடி அரசு உயர்த்தியுள்ளது.இவ்வாறு, அமித் ஷா பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
17-செப்-201814:45:10 IST Report Abuse
ஜெயந்தன் ட..ட..ட....டா.....கலக்குற...சந்துரு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X