லோக்சபா தேர்தல் பிரசாரம் பா.ஜ.,வின், 'டீ - 20 பார்முலா'| Dinamalar

லோக்சபா தேர்தல் பிரசாரம் பா.ஜ.,வின், 'டீ - 20 பார்முலா'

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி: அடுத்த ஆண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்காக, 'டீ - 20' என்ற புதிய வியூகத்தை, பா.ஜ., வகுத்துள்ளது. லோக்சபாவுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தில், மத்தியில் ஆளும், பா.ஜ., உட்பட, பல்வேறு கட்சிகள் ஏற்கனவே ஈடுபட்டுஉள்ளன.மத்தியில் ஆளும், பா.ஜ., அடுத்த தேர்தலிலும் ஆட்சி அமைக்கும் முனைப்பில் உள்ளது. இதற்கான தேர்தல் வியூகங்களை, பிரதமர் நரேந்திர மோடி மற்றும், பா.ஜ., தலைவர், அமித் ஷா வகுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதாவது:கிரிக்கெட்டில், டி - 20 போட்டிகள் நடத்துவது போல், டீ - 20 என்ற புதிய வியூகத்தை கையாள உள்ளோம்.அதன்படி, ஒவ்வொரு பூத் அளவிலும், பல்வேறு தரப்பைச் சேர்ந்த, 20 பேரை, கட்சியின், 'நமோ ஆப்' மூலம் இணைக்க வேண்டும்.இதைத் தவிர, ஒவ்வொரு பூத் நிர்வாகியும், குறைந்தபட்சம், தன் பகுதிக்கு உட்பட்ட, 20 வீடுகளுக்குச் சென்று, டீ குடித்தபடியே, கட்சியின் செயல்பாடுகள், மத்திய அரசின் சிறப்பான திட்டங்கள் குறித்து பிரசாரம் செய்ய வேண்டும்.கடந்த லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது, மோடியை, டீக்கடைக்காரர் என, எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.இதையடுத்து, 'சாய் பே சர்ச்சா' எனப்படும், டீக்கடைகளில் பிரசாரம் செய்தது, மிகப் பெரிய பலனைக் கொடுத்துள்ளது. அதே பாணியில், தற்போது, டீ - 20 பார்முலாவை செயல்படுத்த உள்ளோம்.கட்சியில் தேர்தல் பணியாற்றும் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுடன், பிரதமர் நரேந்திர மோடியும், அமித் ஷாவும் நேரடியாக பேசி வருகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள, 543 தொகுதிகளிலும் உள்ள கட்சியின் தேர்தல் பணியாளர்களுடன் பேச, மோடி திட்டமிட்டுள்ளார். 'நமோ ஆப்' மூலம், வரும் மாதங்களில், இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடத்தப்பட உள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X