சமூக வலைதளங்களை நாடும் கட்சிகள் : பார்லிமென்ட் தேர்தலில், 'டிஜிட்டல்' போர் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சமூக வலைதளங்களை நாடும் கட்சிகள் : பார்லிமென்ட் தேர்தலில், 'டிஜிட்டல்' போர்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

புதுடில்லி: அடுத்த ஆண்டு நடக்கஉள்ள லோக்சபா தேர்தலில், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட, 'டிஜிட்டல்' முறையிலான பிரசாரம் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், அந்த வகையான பிரசாரத்துக்கு, பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன.லோக்சபாவுக்கு, அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரசாரத்தை, பல்வேறு கட்சிகள் ஏற்கனவே துவக்கியுள்ளன.கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின்போது, டிஜிட்டல் முறையிலான பிரசாரம், சமூக வலைதளங்கள் மூலமான பிரசாரம், பா.ஜ.,வுக்கு மிகப் பெரிய அளவில் கை கொடுத்தது. டிஜிட்டல் முறையிலான பிரசாரத்தில் மற்றக் கட்சிகளைவிட, பா.ஜ., முன்னிலையில் உள்ளது.நாட்டில் தற்போது, 46.21 கோடி, 'இன்டர்நெட்' இணைப்புகள் உள்ளன. உலகிலேயே அதிக இன்டர்நெட் இணைப்பு உள்ள நாடுகளில், சீனாவுக்கு அடுத்ததாக, இரண்டாவது இடத்தில் நம் நாடு உள்ளது.மேலும், 2016ம் ஆண்டில், 16.8 கோடி பேராக இருந்த, சமூக வலைதளம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, 2019ம் ஆண்டில், 25.82 கோடியாக உயரும் என, கணிக்கப்பட்டுள்ளது.
தீவிரம் : இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலுக்கு தயாராகும் வகையில், டிஜிட்டல் பயன்பாட்டை, பா.ஜ., தீவிரமாக்கியுள்ளது.காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளும், சமூக வலைதளப் பயன்பாடு, புள்ளி விபர தகவல்களின் அடிப்படையில் வியூகங்கள் வகுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.இது குறித்து, பா.ஜ.,வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் தேசியப் பொறுப்பாளர், அமித் மாள்வியா கூறியதாவது: கட்சியின் டிஜிட்டல் பிரசாரத்தில், 12 லட்சம் தொ ண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசின் செயல்பாடுகள், கட்சியின் அரசியல் கொள்கைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதே, எங்கள் நோக்கம். அதே நேரத்தில், எதிர்க்கட்சிகளின் எந்த பொய் பிரசாரத்தையும் முறியடிக்க, இந்தப் படை தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.காங்கிரஸ் கட்சியும், சமூகவலைதள பிரசாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. பிரபல நடிகை, குத்து ரம்யா, கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் தலைவராக செயல்பட்டு வருகிறார். 'சமூக வலைதள பிரசாரத்தில் ஈடுபட ஆர்வமுள்ளவர்கள் வர வேண்டும்' என, கட்சித் தலைவர் ராகுல், சமீபத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.மேலும், 'வாட்ஸ்ஆப்' சமூக வலைதளத்தின் மூலமாகவும் கட்சிப் பணியாற்ற, காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
ஆய்வு : இரண்டு முக்கிய தேசியக் கட்சிகளைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் டில்லியில் ஆட்சியில் உள்ள, ஆம் ஆத்மி கட்சியும், டிஜிட்டல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ளன. இதற்காக, தனியாக அமைப்புகளை, கட்சிக்குள் அவை உருவாக்கி உள்ளன.இந்த டிஜிட்டல் பிரசாரங்களோடு, முந்தைய தேர்தல் புள்ளி விபரங்களின் அடிப்படையில், வாக்காளர்களின் மனநிலையை அறியும் ஆய்வுகளிலும் கட்சிகள் தீவிரமாக உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X