அபாயம்! பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாராததால்...  வெள்ளம் வந்தால், 200 கிராமங்கள் மூழ்கும்  மணல் திட்டுகளால் மீனவர் தொழில் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அபாயம்! பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாராததால்...  வெள்ளம் வந்தால், 200 கிராமங்கள் மூழ்கும்  மணல் திட்டுகளால் மீனவர் தொழில் பாதிப்பு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

பழவேற்காடு:பழவேற்காடு முகத்துவாரம் துார்வாரும் பணிகள் கிடப்பில் போடப்பட்டதால்,மழை வெள்ளம் வந்தால், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் மழைநீரில் மூழ்கும் அபாயமும், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையும் உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரணி, கொற்றலை ஆகிய ஆறுகளின், மழைநீர் அணை மற்றும் தடுப்பணைகள் நிரம்பிய பின், வெளியேறும் உபரிநீர், பழவேற்காடு ஏரியை வந்தடையும். அங்குள்ள முகத்துவாரம் வழியாக கடலுக்கு செல்லும்.கடந்த, 2015, டிச., மாதம், மேற்கண்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், மாவட்டத்தின் பல பகுதிகள் தண்ணீரில் மூழ்கின.பழவேற்காடு முகத்துவாரம் அடைத்து கிடந்ததால், ஆறுகளின் மழைநீர் கடலுக்கு செல்ல முடியாமல், ஆற்றின் கரைகள் உடைந்து, கிராமங்களுக்குள் புகுந்தது.2,000 மீனவர்கள்இதனால், ஆரணி, கொற்றலை ஆறுகளை ஒட்டியும், பழவேற்காடு ஏரியை ஒட்டிய பகுதியிலும் இருந்த, 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டன. கிராமங்களில் தேங்கிய மழைநீர் வழிந்தோட வழியின்றி கிடந்தது.அப்போது, அடைபட்டு கிடந்த முகத்துவாரத்தை, பழவேற்காடு பகுதியை சேர்ந்த, 2,000 மீனவர்கள் களத்தில் இறங்கி துார்வாரினர். மழைநீரை உடனடியாக கடலுக்கு அனுப்பியதால், கிராமங்களில் வெள்ள பாதிப்புகள் குறைந்தன.அவ்வப்போது முகத்துவாரம் அடைபடுவதும், மீனவர்கள் தற்காலிக வழி ஏற்படுத்துவதும் தொடர்கிறது.இந்நிலையில், மீண்டும் முகத்துவாரம் அடைப்பட்டு கிடப்பதால், மழைநீர் கடலுக்கு செல்வதில், தற்போது சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மணல் திட்டுகள் குவிந்து கிடக்கின்றன.அடுத்த மாதம் முதல், வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ளது. இதனால், ஆறுகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டால், மீனவ மற்றும் ஆற்றின் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், அதனால் அசம்பாவிதங்களுக்கும் வாய்ப்பு உள்ளது.சுழற்சி முறைமுகத்துவாரம் வழியாக, ஆறு மணி நேரத்திற்கு ஒரு முறை கடல் நீர் ஏரிக்கும், ஏரி நீர் கடலுக்கும் சுழற்சி முறையில் சென்று வரவேண்டும்.முகத்துவாரம் முழுவதும் மண் திட்டுகளால் அடைபட்டு கிடப்பதால், இந்த சுழற்சி தடைபட்டு உள்ளது. இதனால் ஏரியில் மீன்வளம் குறைந்து உள்ளதுடன், கடலில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், படகுகளை முகத்துவாரம் வழியாக கொண்டு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.மணல் திட்டுகளில் படகுகள் சிக்குவதால், அவற்றை தள்ளி செல்ல, மீனவர்கள் அவதிப்படுகின்றனர். படகுகளின் அடிப்பாகமும் சேதமடைகின்றது.கடலில், மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள், தொழிலுக்கு செல்ல முடியாமல் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். முகத்துவாரத்தை துார்வாரக்கோரி, மீனவர்கள் வலியுறுத்தியும், நடவடிக்கை இன்றி கிடக்கிறது. இதை கண்டித்து, மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X