கிலோவுக்கு ரூ. 500 குறைந்தது ஏலக்காய்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிலோவுக்கு ரூ. 500 குறைந்தது ஏலக்காய்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கம்பம் : ஏலக்காய் அதிகபட்ச விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு ஒரேவாரத்தில் கிலோவுக்கு ரூ. 500 வரை குறைந்துள்ளது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது. இடுக்கி மாவட்டத்தில் கடந்த மாதம் பெய்த மழை காரணமாக வரலாறு காணாத பேரழிவு ஏற்பட்டது. கேரளாவில் வெள்ளப் பாதிப்பு ரூ. 40 ஆயிரம் கோடி, அதில் வாசனை திரவிய பொருட்கள் ரூ.800 கோடிக்குநஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏலத்தோட்டங்களில் இருந்து 30 சதவீத மகசூல்மட்டுமே கிடைக்கும் நிலை உள்ளது.செப். 8 ல் ஏலக்காய் அதிகபட்ச விலையாக கிலோவிற்கு ரூ. 2 ஆயிரத்து 227 கிடைத்தது. செப். 13 ல்அதிகபட்ச விலை கிலோவிற்கு ரூ. ஆயிரத்து 982 ஆக இருந்தது, செப். 15ல் கிலோவிற்கு ரூ. 500 வரை குறைந்து ரூ. ஆயிரத்து 482 க்கு போனது. சராசரி விலையும் கிலோவிற்கு ரூ. ஆயிரத்து 300 கிடைத்து வந்தது. இது ரூ. 50 குறைந்துரூ. ஆயிரத்து 256 க்கு போனது. ஒரே வாரத்தில் அதிகபட்ச விலையில் கிலோவுக்கு ரூ.500 குறைந்ததற்கான காரணம் தெரியாமல் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X