தனியார் மயமாகும் நிலஅளவைத்துறை : ஊழியர்கள் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் மயமாகும் நிலஅளவைத்துறை : ஊழியர்கள் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு

Added : செப் 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிவகங்கை: ஊழியர்கள் எதிர்ப்பால் நிலஅளவைத்துறை தனியார்மயமாக்கும் முடிவை அரசு நிறுத்தி வைத்தது.நிலஅளவைத் துறையில் ஏராளமான புல உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் நிலஅளவை செய்வதில் தொய்வு ஏற்பட்டது. அப்பணியிடங்களை நிரப்ப ஊழியர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து அப்பணியிடங்களை, புற ஆதார முறையில் நிரப்ப நிலஅளவைத்துறை ஆணையர் உத்தரவிட்டார். முதற்கட்டமாக மாநிலம் முழுவதும் 500 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து நில அளவையாளர் பணியிடங்களையும் புறஆதார முறையில்(அவுட்சோர்சிங்) நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். ஆக., 30 ல் விடுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து புறஆதார முறையில் பணியாளர்கள் நியமனம் நிறுத்தி வைக்கப்பட்டது.தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிணைப்பு நிர்வாகி ஒருவர் கூறியதாவது: நிலஅளவைத்துறையை தனியார் மயமாக்கினால், முறைகேடு நடக்கவாய்ப்புள்ளது. இதை எதிர்த்து போராடியதால், திட்டத்தை கைவிடுவதாக அரசு உறுதியளித்தது. மேலும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதியப்படும் பத்திரங்களுக்கு 'ஆன்லைன்' மூலம் உடனுக்குடன் பட்டா மாறுதல் உத்தரவு வழங்க நிர்பந்தம் செய்கின்றனர். போதிய பணியாளர்கள் இல்லாத நிலையில் பணிச்சுமையால் தவிக்கிறோம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samkey - tanjore,இந்தியா
17-செப்-201809:02:08 IST Report Abuse
samkey //நிலஅளவைத்துறையை தனியார் மயமாக்கினால், முறைகேடு நடக்கவாய்ப்புள்ளது.// இது உலக மகா புளுகு சாமி இப்போ என்னவோ அரிச்சந்திரனும் காந்தியும் புத்தனும் வேலை செய்கிறார்கள் என நினைப்பு. வருவாய்த்துறை இப்படிகேவல மாக கெட்டு போனதற்கு காரணமே நீங்கதாண்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-201806:43:06 IST Report Abuse
Bhaskaran இவர்கள் பணிசெய்தலட்சணத்தினால் தான் அம்மாதிரி நேர்கிறது இனி எப்போதும் அவுட் சோர்சிங் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X