ஆய்வக பொருளே இல்லை : மதிப்பெண் மட்டும் உண்டு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆய்வக பொருளே இல்லை : மதிப்பெண் மட்டும் உண்டு

Added : செப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்: தரம் உயர்த்திய 150 பள்ளிகளுக்கு ஆய்வக பொருட்கள் வழங்காததால், அப்பள்ளி மாணவர்களின் செய்முறை தேர்வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 50, இந்த ஆண்டு 100 என மொத்தம் 150 நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. தரம் உயர்த்தப்படும் போது 25 ஆயிரம் ரூபாய் அல்லது செய்முறை தேர்வுக்கு தேவையான ஆய்வக பொருட்கள் வழங்கப்படும். ஆனால் இன்னும் பொருட்கள் வழங்கவில்லை.அறிவியல் பாடத்தில் எழுத்து தேர்வுக்கு 75 மதிப்பெண், செய்முறை தேர்வுக்கு 25 மதிப்பெண் வழங்கப்படும். கடந்த ஆண்டு செய்முறை தேர்வுகள் நடத்தாமலேயே மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது. தற்போது காலாண்டு தேர்வு நடக்கும் நிலையில், ஆய்வக பொருட்கள் இல்லாமல் எப்படி செய்முறை தேர்வு நடத்துவது என ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.''ஆய்வக பொருட்கள் கேட்டு பல முறை பள்ளி கல்விதுறைக்கு கடிதம் அனுப்பியும் இதுவரை நடவடிக்கையும் இல்லை,'' என உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் சங்க செய்தி தொடர்பு செயலர் முருகேசன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-201806:37:21 IST Report Abuse
Bhaskaran செய்முறை செய்யாமலேயே மதிப்பெண் வழங்கிவிட்டால் போகிறது வரும் வெளிதேர்வாளரை கவனித்தால் போதும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X