ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனால் குறைவான மீன்களோடு கரை திரும்பினர். இலங்கை கடற்படை கெடுபிடியால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் 3 மாதமாக 200 முதல் 300 விசைப்படகில் மட்டுமே மீன்பிடிக்க செல்கின்றனர். மீதமுள்ள ஆயிரம் படகுகளை கரையில் நிறுத்தி உள்ளனர். செப்.15 ல் ராமேஸ்வரத்தில் இருந்து 80 படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இந்திய, இலங்கை எல்லை அருகில் மீன்பிடித்தனர். அப்போது அங்கு 3 கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி, மீனவர்களை மீன்பிடிக்க விடாமல்விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து விட்டு நேற்று ராமேஸ்வரம் கரைக்கு மீனவர்கள் திரும்பினர்.இதனால் எதிர்பார்த்த மீன்வரத்து இன்றி ஒரு படகிற்கு ரூபாய் 10 முதல் 30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தொடர்ந்து மீன்பிடிக்க செல்ல முடியாத ஏற்பட்டதால், வழக்கமாக மீன்பிடிக்க செல்லும் இந்த படகுகளும் இன்று (செப்.17) மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள், என மீனவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X