பழநி கோயில் சிலை மோசடி விசாரணை விரைவில் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநி கோயில் சிலை மோசடி விசாரணை விரைவில் துவக்கம்

Added : செப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி: பழநி முருகன்கோயில் உற்ஸவர் சிலைமோசடி வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் விசாரணை துவங்கும்,'' என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் தெரிவித்தார். பழநி முருகன் கோயிலில் 2004ல், ஐம்பொன் உற்ஸவர் சிலையில் தங்கம் மோசடி தொடர்பாக ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் விசாரிக்கிறார். இவ்வழக்கில் ஸ்தபதி முத்தையா, இணை ஆணையர் கே.கே.ராஜா உட்பட நான்கு பேர் கைதாகி ஜாமினில் வெளியே உள்ளனர். அறநிலையத் துறை முன்னாள் ஆணையர் தனபாலும் சிக்கியுள்ளார்.அரசியல் தலையீடுகாரணமாக வழக்கு கிடப்பில் உள்ளது. இந்நிலையில், நேற்று பழநி முருகன்கோயிலில் ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் முடிக்காணிக்கை செலுத்தினார்.அவர் கூறுகையில், ''வழக்கில் தொடர்பு உடையவர்களை கைது செய்துள்ளோம். டி.எஸ்.பி.,க்கு பதில் கூடுதல் எஸ்.பி., மூலம் இறுதிக்கட்ட விசாரணை ஓரிரு வாரங்களில் துவங்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
17-செப்-201806:41:22 IST Report Abuse
Bhaskaran கொஞ்சம் மைலாப்பூர் கோவில் மயில் சிலை திருட்டிலும் மாணிக்கம் ஐயா கவனம் செலுத்தணுமாய் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X