பேராசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேராசிரியர்களுக்கு பயிற்சி பட்டறை

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில், செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆழமான இயந்திர கற்றல் தொடர்பாக தென் தமிழக அளவில் நடந்த பயிற்சி பட்டறையில் கல்லூரி பேராசியரியர்கள் பயிற்சி பெற்றனர்.
புது டெல்லியில் இயங்கும் பென்னெட் பல்கலைக் கழகத்தின் என்விடியா - பென்னட் ஆராய்ச்சி நிறுவனத்துடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்தியர்களின் பொறியியல் கற்றல் மற்றும் தொழில் மேம்பாட்டு திறன் வளர்க்கும் பயிற்சி மூன்று நாட்கள் நடந்தது.
கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, நெல்லை, விருதுநகர், நாகர் கோயில், திண்டுக்கல், தேனி, சிவகங்கை உட்பட தென் தமிழகத்தில் உள்ள தேர்ந்தெடுக்கப் பட்ட 30 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 63 பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த பயிற்சி கருத்தரங்கில் கலந்து கொண்ட பேராசிரியர்களுக்கு, என்விடியா - பென்னட் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் தீபக் கார்க், மைக்ரோசாப்ட் அஸீர் மற்றும் என்விடியா சூப்பர் கம்யூட்டர் வாயிலாக பயிற்சி அளித்தார். மேலும் உலகின் அதிவேக கணிணி மற்றும் இந்தியாவில் முதலில் அறிமுகப் படுத்தப் பட்ட கணிணி பயன்படுத்த வாய்ப்பு வழங்கப் பட்டதுடன், பல்வேறு நரம்பணு வலையமைப்பு பயிற்சிகள் அளிக்கப் பட்டன. முன்னதாக, கல்லுாரி முதல்வர் ஜவஹர் வரவேற்றார். துணை முதல்வர் ராஜகருணாகரன் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X