வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி: தங்கமணி தகவல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி: தங்கமணி தகவல்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் அமைச்சர் தங்கமணி கூறியதாவது: இந்திய, கம்யூ., மூத்த தலைவர் நல்லக்கண்ணு, மின்வாரியத்தை தனியாருக்கு கொடுக்கும் திட்டம், அரசிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அது முற்றிலும் தவறு; மின்வாரியம் தனியார் மயமாக்கப்படாது. நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு, மின் வினியோகம் செய்ய, தனியாருக்கு அனுமதி அளித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதை எதிர்த்து, டில்லியில் உள்ள தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில், மேல் முறையீடு செய்வோம். நாளை, மத்திய ரயில்வே அமைச்சரை நேரில் சந்தித்து, 16 வேகன்களில் நிலக்கரி வழங்க கோரிக்கை வைக்க உள்ளேன். வெளிநாட்டில் இருந்தும், விரைவில் நிலக்கரி இறக்குமதி செய்யப்படும்.சூரிய மின்சக்தியில் இருந்து, 4,000 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி கிடைத்துள்ளது. மேட்டூர் அனல் மின் நிலையத்தில், கொள்கலனில் ஏற்பட்ட பழுது விரைவில் நீக்கப்படும். தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளதால், எந்த சூழ்நிலையிலும் மின் வெட்டு ஏற்படாது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X