பெண்கள் கூட்டமைப்பு விழாவில் தகராறு : மைக், தையல் மெஷின் வீச்சு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்கள் கூட்டமைப்பு விழாவில் தகராறு : மைக், தையல் மெஷின் வீச்சு

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பெண்கள் கூட்டமைப்பு விழாவில் தகராறு : மைக், தையல் மெஷின் வீச்சு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உலக பெண்கள் முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அடி தடி ஏற்பட்டது. இதில் மைக், தையல் மிஷின் வீசப்பட்டது. ராமநாதபுரம் முகமது சதக் மகாலில் உலக பெண்கள் முன்னேற்ற கூட்டமைப்பு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த அமைப்பின் நிறுவனர்எல்.முத்துக்குமரன், பெண்கள் கூட்டமைப்பின் தலைவி வெண்ணிலா, ராஜா குமரன் சேதுபதி, ராணி லட்சுமி நாச்சியார் உட்பட பலர் பங்கேற்றனர். மாவட்ட தலைவி சரவணப்பிரியா வரவேற்றார்.தென் மண்டல தலைவி வனிதா மகாலட்சுமி பேச ஆரம்பித்தார். அப்போது மேடையை நோக்கி வந்த மர்ம நபர்கள் ஆவேசத்துடன்,'பல்வேறு பெயர்களில் நிறுவனம் ஆரம்பித்து தலா 1,500 ரூபாய் வீதம் 3 ஆயிரம் பெண்களிடம் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக கூறி, மேடையில் இருந்த முத்துக்குமரனை தாக்கினர். மைக்கை பறித்தும், குத்து விளக்கு, சேர், வழங்க இருந்த தையல் இயந்திரத்தை துாக்கி வீசினர்.பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தார். ஒரு சிலர் காயமடைந்தனர். தகவலறிந்த இன்ஸ்பெக்டர் தனபாலன், மண்டபத்தில் இருந்தவர்களை வெளியேற்றினார். தகராறில் ஈடுபட்டவர்கள் குறித்து பெண்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X