சிறுமழை பெய்தும் விவசாய பணிகளை மேற்கொள்ள தயக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமழை பெய்தும் விவசாய பணிகளை மேற்கொள்ள தயக்கம்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கமுதி;கமுதி பகுதியில் தொடர்ந்து 9 ஆண்டுகளுக்கும் மேலாக பருவமழை பொய்ப்பால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மழையின்றி மானாவாரி விவசாய பணிகளை செய்ய முடியாமல், வாழ்வாதாரம் தேடி விவசாயிகள் ஊரை காலி செய்து, இடம் பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது. கமுதி, முதுகுளத்தூர், கடலாடி, சாயல்குடி, பெருநாழி, முஸ்டக்குறிச்சி, துத்திநத்தம், திம்மநாதபுரம், பசும்பொன் உட்பட அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 18 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்களில் விவசாயம் செய்கின்றனர். இந்நிலையில் சில நாள்களுக்கு முன் பெய்த சிறுமழையை நம்பி, கோடை உழவு பணிகளை மேற்கொண்டு உழவு, நெல் விதைப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இருந்தபோதிலும் தொடர் பருவமழை கடந்தாண்டுகளை போல் ஏமாற்றியதால், விதைக்கபட்ட விதைகளை பறவைகள் உணவாக எடுத்து, நிலங்களில் மீண்டும் விதைக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளபட்டுள்ளனர். சிறுமழை பெய்தும் விதைப்பு பணியில் தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்தாண்டு பொய்த்த நெல், பருத்தி, மிளகாய் விவசாயத்திற்கு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, இன்சூரன்ஸ் தொகை வழங்காததால் கவலையிலுள்ளனர். சில விவசாயிகள் தொழிலுக்காகவும், குழந்தைகளின் படிப்புக்காகவும், பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு இடம் பெயரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கடும் வறட்சியால், உழவு செய்து விவசாயம் செய்ய இயலாத விவசாயிகள் தங்களது நிலங்களை தரிசு நிலங்களாகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் அபாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X