சபரிமலை நடை திறப்பு: செப்.21 வரை பூஜைகள் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

சபரிமலை நடை திறப்பு: செப்.21 வரை பூஜைகள்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சபரிமலை நடை திறப்பு: செப்.21 வரை பூஜைகள்

சபரிமலை: புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. செப்.,21 வரை நடை திறந்திருக்கும். கேரளாவில் கடந்த மாதம் பெய்த கனமழையால் சபரிமலை பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டது. இதனால் சபரிமலையில் ஆவணி மாத பூஜைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி நடைதிறந்து தீபம் ஏற்றினார். வேறு பூஜைகள் நடக்கவில்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.புரட்டாசி முதல் நாளான இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் நடக்கும். செப்.,21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். இந்த ஐந்து நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை நடக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X