மக்காச்சோளம் பயிரில் புது வகையான படைபுழுவின் தாக்குதல் அறிகுறிகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோளம் பயிரில் புது வகையான படைபுழுவின் தாக்குதல் அறிகுறிகள்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

கமுதி:கமுதி வட்டார வேளாண் மையத்தில் நடந்த விவசாயிகள் பயிற்சி கூட்டத்தில் மக்காச்சோளம் பயிரில் புதுவகையான படை புழுவின் தாக்குதலை தடுக்க விவசாயிகளுக்கு ஆலோசனை, பயிற்சி நடந்தது. கமுதி வட்டத்தில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்ய கூடிய மேலராமநதி, நீராவி, என்.கரிசல்குளம், புதுக்கோட்டை, ஓ.கரிசல்குளம், நெறிஞ்சிபட்டி ஆதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை காலத்தில் மக்காச்சோளம் விதைத்திடும் பணி மேற்கொள்ளபடுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகத்தில் பயிர்களை தாக்கும் புதுவகையான படைப்புழு பற்றி சில மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது கரூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரில் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. இந்த படைப்புழு சோளம், மக்காச்சோளம், நெல், கரும்பு, தக்காளி, வெங்காயம், நிலக்கடலை, பருத்தி, உருளைக் கிழங்கு, சிறுதானியங்கள் உட்பட 80 வகையான பயிர்களை தாக்குவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகள், தடுக்கும் முறைகள்தாய் அந்துப்பூச்சி 1,500 முதல் 2,000 முட்டைகள் கொண்ட குவியல்களை பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடுகிறது. தண்டிலிருந்து இலை வெளிவரும் பகுதி முட்டையிடுவதற்கு ஏற்ற பகுதியாகும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் இலைகளின் அடிப்பகுதியில் சுரண்டி சேதப்படுத்தும். இதனால் இலைகள் பச்சையம் இழந்து வெண்மையாக காணப்படும். இளம் புழுக்கள் நூல் இழைகளை உருவாக்கும். இதன்மூலம் காற்றின் திசையில் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு பரவும். பூச்சிகளிடமிருந்து பயிரை காத்திட பயிரின் மேல் குறுக்கு வசத்தில் கயிறுகளை கட்டி இழுப்பதன் மூலம் புழுக்களை கீழே விழசெய்து கட்டுபடுத்தலாம்.
விளக்கு பொறி வைத்து தாய் அந்துப்பூச்சிகளை கண்காணித்து, கட்டுப்படுத்துதல் இனக்கவர்ச்சி பொறி பயன்படுத்துதல், முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை வயலில் கட்டி படைப்புழு முட்டைகளை அழித்தல், என்.பி.ஏ., வைரஸ் கரைசல் தெளித்து புழுக்களை அழிக்கலாம். ரசாயன பூச்சிக்கொல்லிகளை வேளாண்மைத்துறை அலுவலர்களின் பரிந்துரையின்படி பயன்படுத்தி புழுக்களை அழித்தல் உட்பட முறைகளை கையாண்டு புதிய வகையான படைப்புழுவின் தாக்குதலை தடுக்க விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும் என கமுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பாக்கியராஜ் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X