'பீம் ஆர்மி' நிறுவனருடன் சம்பந்தம் இல்லை : மாயாவதி | Dinamalar

'பீம் ஆர்மி' நிறுவனருடன் சம்பந்தம் இல்லை : மாயாவதி

Added : செப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

லக்னோ: ''மாயாவதிக்கும் எனக்கும் ஒரே ரத்தம் என கூறிய, 'பீம் ஆர்மி' அமைப்பின் நிறுவனர் சந்திரசேகர் ஆசாத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை,'' என, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, திட்டவட்டமாக கூறியுள்ளார்.
உ.பி.,யில் சஹாரன்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் ஆசாத், 31. இவர், பீம் ஆசாத் என்ற அமைப்பை, மூன்று ஆண்டுகளுக்கு முன் துவக்கினார்.சஹாரன்பூர் மாவட்டத்தில், சமீபத்தில், இரு பிரிவினருக்கு ஏற்பட்ட மோதலை அடுத்து, சந்திரசேகர் ஆசாத், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், அவர், சமீபத்தில், விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியில் வந்த அவர், 'பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியுடன், எனக்கு அவருடன் எந்த பிரச்னையும் இல்லை. அவர் என் உறவினர். நாங்கள் இருவரும் ஒரே ரத்தம்' என்றார்.
இது குறித்து, செய்தியாளர்களிடம், மாயாவதி நேற்று கூறியதாவது: சிறையில் இருந்து வெளியே வந்தவருக்கு, திடீரென என் மீது பாசம் பொங்குகிறது. இவருக்கு, தலித்துகள் நலனில் அக்கறை இருந்தால், பகுஜன் சமாஜ் கட்சியில் இணையட்டும். அதைவிடுத்து, ஒரே ரத்தம் என்று சொல்வதையெல்லம் ஏற்க முடியாது. அவருக்கும் எனக்கும், எந்த சம்பந்தமும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.
வேடிக்கையாக உள்ளது! : பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி உ.பி.,யில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து விட்டு புதிய வீட்டுக்கு நேற்று குடியேறினார். அவர் கூறியதாவது: பா.ஜ., ஆளும் மாநிலங்களில் தலித்துகள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பழங்குடியினர் தாக்கப்படுகின்றனர். இதற்கு பசு பாதுகாப்பை காரணமாக சொல்வது வேடிக்கையாக உள்ளது; இபோன்ற தாக்குதல்கள் ஜனநாயகத்தின் மீது படிந்த கறையாகவே கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-செப்-201812:13:32 IST Report Abuse
Cheran Perumal பகுஜன் சமாஜ் கட்சியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் இருப்பவர்கள் மட்டும்தான் தலித்துகள். மற்றவர்கள் எல்லாம் .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X