கட்சியில் 'டம்மி' பதவி; 'மாஜி'க்கள் அதிருப்தி அமைச்சர்கள் பிடிவாதத்தால் அ.தி.மு.க.,வில் குழப்பம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கட்சியில் 'டம்மி' பதவி; 'மாஜி'க்கள் அதிருப்தி
அமைச்சர்கள் பிடிவாதத்தால் குழப்பம்

சென்னை: பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அ.தி.மு.க.,வில் அமைப்பு செயலர் என்ற முக்கிய பதவி அளிக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

 கட்சி,டம்மி, பதவி,மாஜிக்கள், அதிருப்தி  அமைச்சர்கள் ,பிடிவாதத்தால், அ.தி.மு.க.,குழப்பம்


முக்கிய பதவிகளை எதிர்பார்த்த 'மாஜி' அமைச்சர்கள் மற்றும் முன்னாள் நிர்வாகி களுக்கு 'டம்மி' பதவி வழங்கப்பட்டு உள்ளதால் அதிருப்தியில் உள்ளனர். இதனால், அவர்களை இழுக்கும் முயற்சியில், தினகரன் தரப்பு இறங்கி உள்ளது, அ.தி.மு.க., தலைமைக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

அ.தி.மு.க.,வில் பழனிசாமி, பன்னீர்செல்வம் அணிகள் இணைந்ததும், இருவரின் ஆதரவாளர் கள் இடையே கட்சி பதவிகளை பெற போட்டி நிலவியது. இதனால், நிர்வாகிகளை நியமிப்ப தில் தாமதம் ஏற்பட்டு வந்தது. பதவியை எதிர்பார்த்து ஏமாந்த, முன்னாள் அமைச்சர்கள் இரு வாரங்களுக்கு முன் சென்னையில் கூடி ரகசிய ஆலோசனை நடத்தினர்.

அப்போது கட்சியில் புதிய நிர்வாகிகளை 15 நாட்களுக்குள் நியமிக்காவிட்டால், அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்வது என, முடிவு செய்தனர். இதையடுத்து, புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியை, கட்சி மேலிடம்

துவக்கியது.முன்னாள் அமைச்சர்கள் மற்றும் தங்களுக்கு எதிரானவர்களுக்கு முக்கிய பதவி கொடுக்க அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, முன்னாள் அமைச்சர்களுக்கு, 'டம்மி' பதவி வழங்கப்பட்டு உள்ளது. இது கட்சியில் கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

பன்னீர்செல்வம் தர்மயுத்தம் துவக்கிய போது, முன்னாள் அமைச்சர் தாமோதரன், அவருக்கு பக்க பலமாக இருந்தார்; கோவையில் பன்னீர் அணிக்கு பெரும் உதவியாக இருந்தார். அணிகள் இணைந்த தும், அவர் கட்சியில் முக்கிய பதவியை எதிர்பார்த் தார்.ஆனால், அவருக்கு முக்கிய பதவி வழங்க, அந்த மாவட்ட அமைச்சர் வேலுமணி, எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதனால் தாமோதரனுக்கு விவசாய பிரிவு இணை செயலர் பதவி வழங்கப் பட்டு உள்ளது. அதிருப்தி அடைந்த அவர் தினகரன் அணிக்கு நேற்று முன்தினம் தாவிவிட்டார்.

அதேபோல, முன்னாள் அமைச்சர்கள், ரமணா, மூர்த்தி, சின்னையா ஆகியோருக்கு, எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர்கள் அப்துல்ரஹீம், முகமது ஜான் ஆகியோருக்கு சிறுபான்மையினர் நலப்பிரிவு இணை செயலர்கள் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், முன்னாள் மாவட்ட செயலர் சிந்துரவிச்சந்திரன் ஆகியோரும் முக்கிய பதவிகளை எதிர்பார்த்தனர். அவர்கள் முக்கியத்து வம் பெறுவதை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோர் விரும்பவில்லை.இதன் காரணமாக வெங்கடாசலத்திற்கு ஜெ., பேரவை இணை செயலர் பதவியும், சிந்து ரவிச்சந்திரனுக்கு வர்த்தக அணி செயலர் பதவியும் வழங்கப்பட்டு

Advertisement

உள்ளது. இது, 'டம்மி' பதவி என்பதால், அவர்க ளும் கோபத்தில் உள்ளனர்.அதே நேரத்தில், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு, அமைப்பு செயலர் என்ற முக்கிய பதவி அளிக் கப்பட்ட தால் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


இதற்கிடையில், முக்கிய பதவி கிடைக்காத தால், அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க.,வி னரிடம், தங்கள் பக்கம் வரும்படி, தினகரன் கட்சியினர் பேச்சு நடத்தி வருகின்றனர். அமைச்சர்களாக உள்ளவர்கள், தங்களை மீறி யாரும் வளர்ந்து விடக்கூடாது என, நினைப்ப தால், கட்சியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், வேறு கட்சிக்கு தாவ, ஆலோசித்து வருகின்றனர்.

பெரும்பாலும் பன்னீர் ஆதரவாளர்களுக்கே, 'டம்மி' பதவி வழங்கப்படுவதால், அவரது ஆதர வாளர்கள் அனைவரும்,கடும் அதிருப்தியில் உள்ளனர்.இது, அ.தி.மு.க., தலைமைக்கு நெருக் கடியை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சர் கள் மற்றவர்களை ஒருங்கிணைத்து செல்லாவிட் டால், கட்சிக்கு சிக்கல் உருவாவதை தவிர்க்க முடியாது என, விமர்சகர்கள் கூறுகின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
17-செப்-201818:44:23 IST Report Abuse

தமிழ் மைந்தன் தி.மு.க போல் குடும்ப கட்சியாக்கி எந்த தகுதியுமே இல்லாத ஸ்டாலின் தலைவராக்கியது போல் ஜெயலலிதாவும் தனக்கு வாரிசு யார் என்பதை முன்பே அறிவித்திருக்க வேண்டும்.

Rate this:
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
18-செப்-201800:15:01 IST Report Abuse

Panneerselvam Chinnasamyசென்னை மக்களால் நேரடியாக மேயராக தேர்ந்தெடுக்கப் பட்டவர் ஸ்டாலின்... சென்னை மாநகராட்சி நிர்வாகம் என்பது ஒரு குட்டி மாநில அரசுபோன்ற நிர்வாக அமைப்பு... அதன் பின் உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் என்று பலப் பொறுப்புக்களை பார்த்த பிறகு திமுக தலைவர் ஆகியுள்ளார்.. ஜானகி அம்மையார், ஜெயலலிதா அம்மையார் போல் MGR க்குப்பின் வாரிசாக கட்சி தலைமை ஏற்கவில்லை.....

Rate this:
Karthik - Chennai,இந்தியா
18-செப்-201802:09:17 IST Report Abuse

Karthikஇந்த செய்திக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம். உங்களுக்கு அவர்களை பற்றி சொல்லாமல் தூக்கம் வாராத....

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-செப்-201815:42:33 IST Report Abuse

இந்தியன் kumarஅமைச்சருக்கு எதிரான கோஷ்டிகள் முழுவதும் தினகரன் பக்கம் சாயும்.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-செப்-201815:41:11 IST Report Abuse

இந்தியன் kumarஅம்மாஜிஜே கடைசியாக வைத்த கொலு பொம்மைகளுக்கு அதிஷ்டம் மற்றவர்களுக்கு துரதிஷ்டம்.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X