ராஜிவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி எதிர்ப்பு | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராஜிவ் கொலை கைதிகளை விடுதலை செய்ய பலியான இன்ஸ்பெக்டரின் மனைவி எதிர்ப்பு

Added : செப் 16, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: ''முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு கைதிகளை விடுவிக்கக் கூடாது,'' என ராஜிவ் கொலையின்போது கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் ராஜகுருவின் மனைவி பாலசரஸ்வதி தெரிவித்தார். ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித் 7 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. குண்டு வெடிப்பில் ராஜிவ் கொலை செய்யப்பட்டபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் ராஜகுருவும் கொல்லப்பட்டார். அவரது மனைவி பாலசரஸ்வதி சென்னையில் வசிக்கிறார். அவர் கூறியதாவது:- என் கணவர் ராஜகுரு பல்லாவரம் இன்ஸ்பெக்டராக இருந்தார். 1991ல் ஸ்ரீபெரும்புதுாரில் நடந்த ராஜிவ் தேர்தல் பிரசார கூட்ட பாதுகாப்பு பணிக்கு சென்றார். அங்கு விடுதலை புலிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். அப்போது எனது கண வரும் கொல்லப்பட்டார். என் வாழ்க்கையில் எல்லாமுமாக இருந்த என் கணவரை இழந்து தவித்தேன். என் இரண்டு பிள்ளைகள் தந்தையின் உடலைக்கூட பார்க்கவில்லை. அந்த அளவிற்கு பொட்டலமாக என் கணவர் உடலை கொடுத்தார்கள். என் குழந்தைகள் அழுது கதறினர். அதன்பிறகு என் குடும்பம் அனுபவித்த கஷ்டத்தை சொல்ல வார்த்தை இல்லை. என் குடும்பநிலை யாருக்கும் வரக்கூடாது. அந்த அளவிற்கு துயரத்தை அனுபவித்தோம். நாங்களும் தமிழர்கள் தான். எந்த தலைவரும் எங்கள் வீட்டிற்கு வந்து கேட்டதில்லை. என்னைப்போல் அந்த வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்ட அத்தனை குடும்பங்களும் வேதனைகளை அனுபவித்தது. ராஜிவ் கொலை கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என இன்று அனைத்து தலைவர்களும் பேசுகிறார்கள். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அத்தனை பேரும் அப்பாவிகளா.ராஜிவ் கொலையின்போது அங்கு செயல்பட்ட விடுதலை புலிகள் சிவராசன், தாணுவுடன் இப்போது சிறையில் உள்ளவர்கள் அந்த பொதுக்கூட்ட இடத்தில் ஒன்றாக இருந்த புகைப்படங்கள் என்னிடம் உள்ளன. அவர்கள் ராஜீவ் கொலையாளிகளுக்கு துணையாக இருந்தார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது பல ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டார்கள், அவர்களை விடுதலை செய்யவேண்டும் என, குற்றம்சாட்டப்பட்டவர்கள் அப்பாவிகள் என்பதுபோல பேசிவருவது இந்த படுகொலையில் உயிரை இழந்தவர்களின் குடும்பங்களில் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. நீண்ட நாட்கள் சிறையில் இருந்தால் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்றால், யார் வேண்டுமானாலும் கொலை செய்ய தயங்க மாட்டார்கள். இந்த முடிவை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். இந்த கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sadasivan Kulaikather - chennai,இந்தியா
17-செப்-201811:59:07 IST Report Abuse
Sadasivan Kulaikather இன்ஸ்பெக்டர் ராஜகுரு எனக்கு அண்ணன் முறையாவார். நெல்லை மாவட்டம் ஆ திருமலாபுரம் என்ற கிராமம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X