முதியோர் உதவித்தொகை பெற 8 மாதமாக காத்திருக்கும் 187 பேர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முதியோர் உதவித்தொகை பெற 8 மாதமாக காத்திருக்கும் 187 பேர்

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

திருத்தணி:எட்டு மாதங்களில், முதியோர் உதவித்தொகை வழங்கக் கோரி விண்ணப்பித்தோரில், 187 பேர் உத்தரவு பெற்றும், இன்னும் உதவித்தொகை கிடைக்காமல் கடும் அவதிப்படுகின்றனர்.திருத்தணி தாலுகாவில், 71 ஊராட்சிகளில், 350க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தாலுகா அலுவலகத்தில், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அலுவலகம் இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்தின் மூலம் முதியோர், கணவனை இழந்தோர், கணவனால் கைவிடப்பட்டோர் உள்ளிட்டோருக்கு, மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஜன., - ஆக., மாதம் வரை, 408 பேர் முதியோர் உதவித்தொகை வழங்க கோரி, அதிகாரிகளிடம் விண்ணப்பித்தனர். இதில், 187 பேரின் விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்ததாக ஏற்கப்பட்டு, முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவு பிறக்கப்பட்டது. தகுதியில்லாத, 203 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள, 108 விண்ணப்பங்கள் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், உதவித் தொகை வழங்க உத்தரவு பிறப்பித்த, 187 பயனாளிகளுக்கு, இதுவரை உதவித்தொகை கிடைக்கவில்லை.தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள், ஏழு மாதங்களாக முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை என, தாசில்தார் அலுவலகத்திற்கு தினமும் வருகின்றனர்.இது குறித்து, வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:திருத்தணி தாலுகாவில், 14 ஆயிரத்து, 970 பயனாளிகள், உதவித்தொகை பெறுகின்றனர். நிதி நெருக்கடியால், புதிய பயனாளிகளின் பெயர், உதவித்தொகை பெறும் பட்டியலில் சேர்க்க முடியவில்லை.தற்போது உதவித்தொகை பெறுவோரில் யாரேனும் இறந்தால் அல்லது தகுதி இல்லாதோரை நீக்கிய பின், புதியவர்கள் சேர்க்கப்படுவர்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X