ஓய்வு தொழிலாளர்களுக்கு வட்டி நிலுவை : போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு 'கெடு' | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஓய்வு தொழிலாளர்களுக்கு வட்டி நிலுவை : போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு 'கெடு'

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: 'ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப் பலன்களுக்கு, வட்டியை வழங்கா விட்டால், அரசு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர்கள் மீது,நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் படும்' என, உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணப் பலன்களை, போக்குவரத்துக் கழகங்கள், நிர்வாக செலவுக்கு பயன்படுத்தின. இதனால், தமிழகம் முழுவதும், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு, வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட பணப் பலன்கள், 1,000 கோடி ரூபாய் வரை வழங்கப்படவில்லை.கடந்த, 2012 டிசம்பர் வரை, ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், நிறுத்தி வைக்கப்பட்டபணத்துக்கு வட்டி வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றம், 205 கோடி ரூபாய் வட்டி வழங்க, உத்தரவிட்டது.இதை அமல்படுத்தாததால், தொழிற்சங்கத்தினர், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். அதில், வட்டி வழங்க உத்தரவிடப்பட்டது.இதையடுத்து, முதல் தவணையாக, 142.30 கோடி ரூபாய் ஒதுக்கி, ஆக., 20ல், ஓய்வு தொழிலாளர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டது. இரண்டாவது தவணையாக, 62.70 கோடி ரூபாய், வழங்கப்பட வேண்டும். அதை வழங்காததால், நேற்று முன்தினம், தொழிற்சங்கங்கள் சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, சென்னைஉயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.விசாரித்த நீதிமன்றம், போக்குவரத்து துறை செயலர், போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குனர்கள் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் தொடரக் கூடாது என, கேள்வி எழுப்பியது.மேலும், செப்., 20 மாலை, 5:00 மணிக்குள், ஓய்வு தொழிலாளர்களின் வங்கி கணக்கில், வட்டி, 62.70 கோடி ரூபாயை செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு, போக்குவரத்து துறை செயலர், தமிழகத்தின், எட்டு கோட்ட நிர்வாக இயக்குனர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X