பால் தரம் அறிய 'இ மேட்' கருவி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பால் தரம் அறிய 'இ மேட்' கருவி

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருப்பூர்: அதிகளவில் பால் உற்பத்தி, கொள்முதல் செய்யப்படும் இடங்களில், பொதுமக்களே பாலின் தரத்தை அறிந்து கொள்ள, 'இ மேட்' கருவி வைக்கப்பட உள்ளது.கறவை மாடு வளர்ப்போர், 'ஆவின்' மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு, பால் வழங்குகின்றனர். அதுதவிர, நேரடியாகவும், பால் விற்பனையில் ஈடுபடுகின்றனர்.ஆனால், பொதுமக்களால், பாலின் தரம் மற்றும் எடை உறுதிபடுத்தப்படுவதில்லை.பாலில், எடையளவு குறைவதால், நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். கலப்பட பாலை உட்கொள்வதால், நோய் ஏற்படுகிறது.இந்நிலையில், பொதுமக்களே, பாலின் தரத்தை கண்டறியும் வகையில், 'இ மேட்' எனப்படும், 'எல்ட்க்ரானிக் மில்க் அடல்ட்ரேஷன் டெஸ்ட்' கருவியை, ஆங்காங்கே வைக்க, உணவு பாதுகாப்புத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கூறியதாவது:மாவட்டந்தோறும், அதிகளவில் பால் உற்பத்தி மற்றும் கொள்முதல் செய்யப்படும் இடங்களைத் தேர்வு செய்து, அங்கு, 'இ மேட்' கருவி வைக்கப்படும். நுகர்வோர், இலவசமாக, பாலின் தரத்தை பரிசோதிக்கலாம்.பாலில், கலப்படம் இருப்பது தெரியவந்தால், உணவு பாதுகாப்பு அலுவலரிடம் புகார் தெரிவிக்கலாம்.இத்திட்டத்தின் படி, முதல் கட்டமாக, ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், இரு உணவுப் பாதுகாப்பு அலுவலர்களுக்கு, உபகரணம் மூலம், பாலின் தரம் கண்டறியும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X