ராமேஸ்வரத்தில் நாளை இலவச சித்த வர்ம சிகிச்சை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரத்தில் நாளை இலவச சித்த வர்ம சிகிச்சை

Added : செப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமேஸ்வரம்;ராமேஸ்வரத்தில் நாளை (செப்.18) பசுமை ராமேஸ்வரம் மற்றும் தினமலர் ஊடக உதவியுடன் இலவச சித்த வர்ம சிகிச்சை முகாம் நடக்க உள்ளது.
ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் மொகபீர் தர்மசாலாவில் (மங்கம்மா சத்திரம்) நாளை விவேகானந்தா கேந்திரம் சார்பில் 3ம் கட்டமாக இலவச சித்த வர்ம சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரத்தின் சித்த வர்ம சிகிச்சை நிபுணர் டாக்டர் கணபதிவேலு தலைமையில் 15 சித்தவர்ம டாக்டர்கள் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக சிகிச்சை அளிக்க உள்ளனர்.
முகாமில் நாள்பட்ட வாதநோய், மூட்டுவலி, இடுப்புவலி, கழுத்து வலி, ரத்த கட்டு, வீக்கம், தசைக்காயம்,எலும்பு முறிவு, நரம்பு சார்ந்த நோய்கள், தலைவலி, இளைப்பு நோய், தோள்பட்டை வலி, பெண்கள் சம்பந்தமான நோய்க்கு சிகிச்சை அளித்து, இலவசமாக சித்த மருந்து வழங்க உள்ளனர். இம்முகாம் காலை 10 முதல் 2 மணி வரை நடக்கும். முகாமில் சிகிச்சை பெறும் நோயாளிகள் மருந்து காலி பாட்டில் எடுத்து வரவேண்டும். இதற்கான ஏற்பாடுகளை தினமலர் ஊடக உதவியுடன், பசுமை ராமேஸ்வரம் அமைப்பு நிர்வாகிகள் ஸ்ரீதர், சரஸ்வதி செய்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X